வீடியோ; 83 வயதில் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கிரிக்கெட்.. முன்னாள் கிரிக்கெட் வீரரின் ஆச்சரிய கதை!

0
92

நமக்கு எல்லாம் தலைவலி, காய்ச்சல் வந்தால் படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டோம். ஆனால் உயிரே போகும் அளவிற்கு நோய்வாய் பட்டுள்ள 83 வயது உடைய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆக்சிஜன் சிலிண்டர்களை மாட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடினார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

அதுதான் தற்போது நடந்திருக்கிறது. பிரிட்டனை சேர்ந்த 83 வயது முன்னாள் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஸ்டில் என்பவர் தான் இந்த சாதனையை படைத்திருக்கிறார். அலெக்ஸ் ஸ்டில் 1967 ஆம் ஆண்டு தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

- Advertisement -

மொத்தமாக 14 உள்ளூர் போட்டிகளில் விளையாடி உள்ள அலெக்ஸ் ஸ்டில் 621 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். ஸ்காட்லாந்தில் முதல் தர கிரிக்கெட்டில் முக்கிய வீரராக இருந்திருக்கிறார்.

அயர்லாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 97 ரன்கள் அடித்திருக்கிறார். மேலும் 11 கேட்ச்களும், இரண்டு ஸ்டம்பிங் செய்து இருக்கிறார். இந்த நிலையில் அலெக்ஸ் ஸ்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் மருத்துவர்கள் நீங்கள் இன்னும் ஒரு ஆண்டு தான் வாழ போகிறீர்கள் என்று கூறி இருக்கிறார்கள்  ஆனால் மருத்துவர்களின் பேச்சை பொய்யாக மாற்றியுள்ள அலெக்ஸ் ஸ்டில் வயதும் நோயும் நமது கனவுகளுக்கு தடை இல்லை என்பது நிரூபித்திருக்கிறார்.

- Advertisement -

அலெக்ஸ் ஸ்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இருப்பினும் அதனை ஒரு குறையாக எடுத்துக் கொள்ளாத அளவில் அந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் மாட்டிக் கொண்டு கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

விக்கெட் கீப்பிங் செய்யும் அலெக்ஸ் ஸ்டில் முதுகில் சிலிண்டரை மாட்டிக் கொண்டு பந்தை பிடித்த விதம் அங்கு இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கிரிக்கெட் மீதான காதலும் உடலுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியமும் தான் அலெக்ஸ் ஸ்டீலின் ஊக்கமும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. 83 வயதிலும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அலெக்ஸ் ஸ்டீல் உள்ளார்.