83 உலக கோப்பை திரும்பியது.. இந்திய ODI கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. ரசிகர்கள் உச்சகட்ட கோபம்!

0
1920
ICT

இந்திய அணி தற்போது சொந்த நாட்டில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் கடைசி ஓவரில் இழந்து 199 ரன்கள் எடுத்து 200 ரன்கள் இலக்காக இந்திய அணிக்கு வைத்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியில் பந்து வீசிய ஆறு பந்துவீச்சாளர்களும் விக்கெட் கைப்பற்றினார்கள். சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களுக்கு 28 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கான எதிர்பார்ப்பு இந்த உலகக் கோப்பையில் மிக அதிகமாக இருந்தது. இந்தியாவில் நடைபெறுவது இந்திய அணிக்கு சாதகம், அதே சமயத்தில் உலகக்கோப்பை என்று வந்தால் ஆஸ்திரேலிய அணி வேறு விதத்தில் செயல்படும் என்பதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருந்தது.

இப்படியான நிலையில் ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன காரணத்தினால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய மகிழ்ச்சியில் இருந்தார்கள். இந்திய அணியின் செயல்பாட்டால் உலகக் கோப்பை குறித்த அவர்களின் கனவு பெரிதானது.

- Advertisement -

இந்த நிலையில் களம் இறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் ரோஹித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். இந்திய ரசிகர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சி அடைந்ததோடு, மறுபக்கம் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்திய பேட்டிங் செயல்பாட்டால் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்றார்கள்.

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாபேவுக்கு எதிராக விளையாடிய போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு அதே நிகழ்வு தற்பொழுது நடந்திருக்கிறது.

மேலும் இதுநாள் வரையிலான இந்திய ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய டாப் ஆர்டரில் மூன்று பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்காமல் அவுட் ஆனது கிடையாது. தற்பொழுது இந்த அணி அப்படியான மோசமான சாதனையை உலகக் கோப்பையின் முதல் போட்டியில் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!