சிஎஸ்கே கழட்டிவிட்ட 8 வீரர்கள்.. கையிருப்பு மொத்தம் எத்தனை கோடி? – முழு விபரங்கள்!

0
4203
CSK

உலகின் நம்பர் ஒன் டி20 பிரான்சிஸ் தொடரான இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் தற்போது வீரர்களை தக்க வைக்கவும், வீரர்களை பரிமாறிக் கொள்ளவும், வீரர்களை நீக்கவும் இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று 10 அணிகளும் தங்கள் எந்தெந்த வீரர்களை நீக்குகிறார்கள் என்கின்ற விபரத்தை படிப்படியாக வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த வகையில் நடப்பு ஐபிஎல் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் நீக்கி இருக்கும் எட்டு வீரர்களின் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் எதிர்பார்த்ததைப் போலவே 16.20 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் கழட்டிவிடப்பட்டு இருக்கிறார். மேலும் 50 ராயுடு ஓய்வு பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து கைல் ஜெமிசன், தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் சிசண்டா மஹால ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களை கழட்டிவிட்டு இருக்கிறது.

மேலும் இந்திய உள்நாட்டு வீரர்களான சேனாபதி, கே.பகத் வர்மா மற்றும் ஆகாஷ் சிங் ஆகிய மூன்று இளம் வீரர்களை நீக்கி இருக்கிறது. இதன் மூலம் நான்கு இந்திய வீரர்கள் மற்றும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் எட்டு பேர் சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த எட்டு வீரர்களை நீக்கி இருப்பதன் மூலமாக 25 கோடி ரூபாய் சென்னை அணிக்கு கையிருப்பு கிடைத்திருக்கிறது. இது இல்லாமல் இந்த வருடம் அதிகமாக ஒவ்வொரு அணிக்கும் தரப்படும் ஐந்து கோடியோடு சேர்த்து தற்பொழுது சென்னை அணியிடம் 30 கோடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஏலத்திற்கு வரும் ஹெட், ரவீந்தரா போன்ற முக்கிய வீரர்களை வாங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.