7 விக்கெட் 45.2 ஓவர்.. இலங்கையையும் வீழ்த்தியது ஆப்கான்.. அரையிறுதி வாய்ப்பு இருக்கிறதா?.. பாக் புள்ளி பட்டியலில் பரிதாபம்!

0
1197
Afghanistan

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் புனே மைதானத்தில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசுவது என முடிவு செய்தது. அரை இறுதி வாய்ப்பில் நீடிப்பதற்கு இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமானது.

- Advertisement -

இலங்கை அணிக்கு இன்னிங்சை தொடங்கிய கருணரத்னே 15, பதும் நிஷாங்கா 45, கேப்டன் குசல் மெண்டிஸ் 39, சமீரா சமரவிக்கிரமா 36, சரித் அசலங்கா 22, தனஞ்செய டி சில்வா 14, ஏஞ்சலோ மேத்யூஸ் 23, துஷ்மந்திர சமீரா 1, மதிஷா தீக்ஷனா 29, கஸூன் ரஜிதா 5, தில்சன் மதுசங்கா 0* என்ன ரன்கள் எடுக்க, 49.3 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் பஸுல்லாஹ் ஃபரூகி பத்து ஓவர்களில் 38 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். முஜீப் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் ஓவரிலேயே ரன் ஏதும் இல்லாமல் ரகமனுல்லாஹ் குர்பாசை வீழ்த்தி மதுசங்கா அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த இப்ராகிம் ஜட்ரன் மற்றும் ரஹமத் ஷா இருவரும் சேர்ந்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இப்ராகிம் ஜட்ரன் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ரஹமத் ஷா மற்றும் கேப்டன் ஷாகிதி ஜோடி 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரஹ்மத் ஷா 62 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து கேப்டன் ஷாகிதி உடன் ஓமர்ஸாய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இறுதிவரை பிரியாமல் நின்று 45.2 ஓவரில் இலக்கை எட்ட வைத்து ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தது. கேப்டன் ஷாகிதி 58 ரன்கள், ஓமர்ஸாய் 73 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்கள். இலங்கை தரப்பில் மதுசங்கா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

தற்போது அனைத்து அணிகளும் ஆறு போட்டிகள் விளையாடி முடித்துள்ளன. ஆப்கானிஸ்தான அணி ஆறு போட்டிகளில் மூன்று வெற்றிகள் பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஆறு மற்றும் ஏழாம் இடங்களுக்கு தள்ளி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான அணி தனது அடுத்த மூன்று ஆட்டங்களில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை எதிர்கொள்கிறது. இதில் இரண்டு போட்டிகளை வெல்வதன் மூலமாகவே ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு சிறு அரையிறுதி வாய்ப்பு இருக்க செய்கிறது.