6 பந்தில் 7 சிக்ஸ்- 43 ரன்கள்.. இனி எவராலும் தொட முடியாத சாதனை படைத்த ருத்துராஜ் – 7 சிக்ஸ் வீடியோ உள்ளே!

0
13769

ஒரே ஓவரில் ருத்துராஜ் அடித்த 7 சிக்ஸர்கள் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் ஹசாரே தொடரில் குவாட்டர் பைனல் சுற்று நடைபெற்று வருகிறது. இரண்டாவது குவார்ட்டர் பைனலில் உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா அணிகள் விளையாடின.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணிக்கு கேப்டன் ருத்ராஜ் ஒரு முனையில் நிலைத்து ஆட மறுமுனையில் வந்த வீரர்கள் சிறு சிறு பாட்னர்ஷிப் அமைத்து அவுட் ஆகினர்.

துவக்க வீரர் ராகுல் 9, பச்சோ 11, பாவனே 37 மற்றும் அசிம் காசி 37 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். இதனால் நடுவில் மஹாராஷ்டிரா அணி திணறியது.

யார் வந்தால் என்ன? போனால் என்ன? என்றவாறு மறுமுனையில் நின்று தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருத்துராஜ், சதமடித்த பிறகு ஆட்டத்தை அடுத்த கியருக்கு மாற்றி வெகுவாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

150 ரன்கள் கடந்த பின்பும் சோர்வு அடையாமல் ஆடிவந்த இவருக்கு வரமாக கிடைத்தது 49 வது ஓவர். அதை சிவா சிங் வீசினார். அந்த ஓவரில் ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்கள் விலாசினார். துரதிஷ்டவசமாக ஐந்தாவது பந்து நோபால் ஆனது அதையும் சிக்சராக அடிக்க 6 சித்தர்கள் ஆனது. க

டைசி பந்தில் சிக்சர் அடித்தால் புதிய உலக சாதனை படைக்கலாம் என இருந்தபோது, அதிலும் சிக்சர் அடித்து ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் உட்பட 43 ரன்கள் என புதிய சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இன்னிங்ஸ் இறுதியில் 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் அடிக்கப்படும் இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். இதற்கு முன்னர் இந்தாண்டு விஜய் ஹசாரே தொடரில் தமிழக வீரர் ஜெகதீசன் 277 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ