சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களாக இருக்கும் 7 பிரபலங்கள்

0
72
Simbu and Megha Akash in CSK Jersey

இந்தியன் பிரீமியர் லீக்கின் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் கருதப்படுகிறது. கலந்து கொண்ட 12 தொடரில் 11 முறை பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், நான்கு முறை கோப்பையையும் முத்தமிட்டுள்ளது. உலகிலேயே அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அதற்கு முக்கிய காரணம் எம்.எஸ்.தோனி என்றே சொல்லாலும். அதுமட்டுமில்லாமல், அணியில் ஆடும் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை தக்க வைத்துக் கொள்வர். மற்ற அணிகளைக் காட்டிலும் சி.எஸ்.கே சிறப்பாக செயல்படுவதற்கு இதான் முக்கிய காரணம். வேறு துறைகளில் இருக்கும் பிரபலங்கள் பலர், சென்னை அணியின் ரசிகர்களாக உள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விஜய்

கோலிவுட்டின் இமையத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். ஓரிரு முறை, சி.எஸ்.கே ஜெர்சி அணிந்து கொண்டு ரசிகர்களோடு ரசிகனாக போட்டியைக் கண்டு கழித்துள்ளார். சமீபத்தில் கூட இவர் கேப்டன் தோனியை நேரில் சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

- Advertisement -

மேகா ஆகாஷ்

இளம் அழகி மேகா ஆகாஷ், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமான நடிகை. மேகா, சிறுவயது முதலே கேப்டன் தோனியின் வெறித்தனமான ரசிகை. ஒரு முறை தோனி பிறந்தநாள் அன்று அவரை சந்தித்து கேக் வெட்டி கொண்டாடினார். பல நேர்க்கானல்களில் தோனியைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சிலம்பரசன்

தமிழ் திரையுலகின் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசனும் தோனி ரசிகன் தான். சமீபத்தில் கூட, இவர் நடிக்கும் ‘ கொரோனா குமார் ‘ திரைபடத்தின் அறிவிப்பை பாடல் மூலமாக தன் ரசிகர்களுக்கு வெளியிட்டார். அப்பாடல் சென்னை சூப்பர் கிங்ஸைப் பற்றிய ஒன்று. மேலும், குவாலியர் – 1ல் தோனியின் பினிஷிங்கிற்கு ‘ தல ‘ என்ற ஹாஸ்டாகை பயன்படுத்தி டுவீட் செய்து, சி.எஸ்.கே ரசிகர்களோடு தன் ஆனந்ததைப் பகிர்ந்து கொண்டார்.

கிரேட் கிராஸ்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீரர் கிரேட் கிராஸ், சென்னை அணியின் தீவிரமான ரசிகை. சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சி அணிந்து கொண்டு அவர் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டார். இவரது சக வீராங்கனை அலெக்சேன்ட்ரா ஹார்ட்லே, பெங்களூர் ரசிகை. டிவிட்டரில் இவர்கள் இருவரும் தமாஷாக சண்டைப்போட்டுக் கொள்வது வேடிக்கையாக இருக்கும்.

- Advertisement -

தமன்னா பாட்டியா

நேர்காணல் ஒன்றில் பிரபல நடிகை தமன்னா, சி.எஸ்.கே பற்றியும் கேப்டன் தோனி பற்றியும் பெருமிதமாக பேசினார். அவர் கூறியதாவது, “ ஐ.பி.எலில் எனக்கு பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ். நான் கேப்டன் தோனியின் மிகப் பெரிய ரசிகையும் கூட. அவர்கள் சிறப்பாக ஆடுவதைக் காண நான் காத்திருக்கிறேன். ”

ஶ்ரீஜேஷ்

இவர் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பராக செயல்படுகிறார். சென்ற ஆண்டு, தான் ஒரு சென்னை சூப்பர் கிங்ஸின் ரசிகன் என்பதை கூறினார். நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன் எம்.எஸ்.தோனியைப் பின்பற்றுகிறார் என்பதையும் தெரிவித்தார்.

- Advertisement -

பிரியா பிரகாஷ் வாரியர்

மலையாள நடிகை பிரியா வாரியர், தன்னுடைய கண்ணடிப்பால் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்தார். ஒரு முறை இன்ஸ்டாகிராமில், அவருடைய ரசிகர் ஒருவர், “ உங்களுக்கு பிடித்த ஐ.பி.எல் அணி எது ? ” என்ற கேள்வ எழுப்ப ; அதற்கு அந்த நடிகை, தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி தான் என்னுடைய விருப்பாமான அணி என பதிலளித்தார்.