டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடியதன் மூலம் ஐ.பி.எலில் அதிக சம்பளம் வாங்க வாய்ப்புள்ள 7 வீரர்கள்

0
139
Adam Zampa and Trent Boult

2021 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. பல வீரர்கள் தொடர் முழுதும் அற்புதமாக செயல்பட்டனர். கிரிக்கெட்டில் அடுத்து நடக்கவிருக்கும் பெரிய நிகழ்ச்சி, ஐ.பி.எல் ஏலம் தான். அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல் மெகா ஏலம் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நடைபெறும். அதற்கு முன் பங்கேற்கும் அணிகள், அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். இதனால் சிறந்த வீரர்கள் பலர் ஏலத்திற்கு வர நேரிடிகிறது. டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடிய வீரர்கள் சிலருக்கு, 2022 ஐ.பி.எலில் அதிக சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

டிரென்ட் போல்ட்

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில், வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் துல்லியமாக பந்துவீசி 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைபற்றி அசத்தினார். நியூசிலாந்து அணி இறுதிப் போட்டி வரை சென்றதற்கு போல்டின் சிறப்பான பந்துவீச்சு முக்கிய காரணம். ஒருவேளை மும்பை அணி போல்ட்டை தக்க வைத்துக் கொண்டால், அவரின் தற்போதைய சம்பளாமனா 3.2 கோடியை விட அடுத்த ஆண்டு அதிகம் பெறுவார். அப்படி இல்லையெனில் என்றாலும், நிச்சயம் பெரிய தொகைக்கு ஏலம் போவார்.

- Advertisement -

முஹம்மது நபி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் நபி, தன்னுடைய பங்காற்றலுக்கு வெறும் ஒரு கோடியே வாங்குகிறார். அதிரடியாக பேட்டிங் செய்வதோடு பவர்பிளேவிலும் எக்கனுமிக்கலாக பந்துவீசும் திறன் கொண்டவர். இவரது சமீபத்திய ஃபார்மை வைத்துப்பார்த்தால், அடுத்த ஆண்டு இதை விட நல்ல தொகைக்கு வாங்கப்படுவார்.

ஆதம் ஜாம்பா

2021 டி20 உலகக்கோப்பையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் ஜாம்பா பெற்றார். பங்கேற்ற 7 போட்டிகளில் ஒரு முறை கூட 6.5 எக்கனாமியை தாண்டவில்லை. ஒரு ஸ்பின்னர் இவ்வளவு குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகள் வீழ்த்துவது பெரிய சாதனை. 2021 ஐ.பி.எலில் பொங்களூர் அணியால் 1.5 கோடிக்கு ஒப்பந்த செய்யப்பட்டிருந்த ஜாம்பா, தனிப்பட்ட காரணங்களினால் ஒதுங்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோ.எல்.ராகுல்

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் கோ.எல்.ராகுல், டி20 உலகக்கோப்பையில் தொடர்ந்து மூன்று அரை சதங்கள் விளாசினார். இருப்பினும் இந்திய அணியால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதே போல், பஞ்சாப் அணிக்கும் தன் முழு சக்தியையும் கொடுத்து ரன்கள் சேர்ப்பார். ஆனாலும் பெரும்பாலான போட்டிகளில் அவ்வணி மண்ணைக் கவ்வி விடும். லோகேஷ் ராகுல், பஞ்சாப் அணியை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. புதிய அணிக்கு அல்லது ஏலத்திற்கு வந்தால், குறைத்தது 15 கோடி நிச்சயம்.

- Advertisement -

ஜாஸ் பட்லர்

இங்கிலாந்து நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பட்லருக்கு இவ்வுலகக் கோப்பைத் தொடர் பிரமாதமாக அமைந்தது. இலங்கை அணிக்கு எதிரான ஸ்லோ பிட்சிலும் அபாரமாக ஆடி சதம் அடித்தார். இந்திய பிரீமியர் லீகில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 4.4 கோடிக்காக விளையாடுகிறார். இவரது தகுதிக்கு இத்தொகை மிகக் குறைந்தது. 2022 ஐ.பி.எலில் இவருக்கு பெரிய தொகை காத்திருக்கிறது.

அன்ரிச் நோர்க்கியா

யாரும் எதிர்பார்க்காத வகையில், தென்னாபிரிக்கா 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பதிவு செய்தது. ஆனால் துரதிஸ்டவசமாக ரன் ரேட் அடிப்படையில் அவர்களது அரை இறுதிக் கனவு வெறும் கனவாகவே சென்றது. முக்கிய வீரர்கள் இல்லாத பட்சத்திலும் அவர்களின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அதற்கு மிக முக்கியக் காரணம் வேகப்பந்து வீச்சாளர், நோர்க்கியா. அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டுகள் வீழ்த்தி 5.38 எனும் சிறப்பான எக்கனாமி ரேட்ட வைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஐ.பி.எலில் இவருக்கு தகுதியான தொகை கட்டாயம் கிடைக்கும்.

ரஷீத் கான்

சுழல் மன்னன் ரஷீத் கான், 2021 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களில் இவரின் பெயர் முதல் 2 இடங்களில் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ரஷீத் கானின் தற்போதைய சம்பளம் 9 கோடி. இவர் ஆற்றும் பணிக்கு அது குறைந்த தொகை தான். 2022 ஐ.பி.எலில் ரஷீத் கான், 10 கோடிக்கு மேல் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.