சர்வதேச டி20யில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத 7 பிரபல கிரிக்கெட் வீரர்கள்

0
1230
Stephen Fleming and Ambati Rayudu

ரசிகர்களால் அதிகம் பின்பற்றப்படும் ஃபார்மட் டி20 கிரிக்கெட் . அதற்கு முக்கிய காரணம் ஐ.பி.எல் போன்ற தொடர்கள் உலகெங்கும் ஆடப்படுவதால் தான். உலகக் கோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாக, சமீபத்தில் ஐசிசி அறிவித்தது. இதனால் 20 ஓவர் போட்டிகள் இன்னும் பிரபலம் அடையும்.

டி20 கிரிக்கெட் என்றாலே அதிரடி ஆட்டம் தான். நாலாபக்கமும் பவுண்டரியும் சிக்ஸரும் பறக்கும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. இதனால் தான் 20 ஓவர் போட்டிகள் அதிகம் பிரபலமடைந்துள்ளது. இக்கட்டுரையில், சர்வதேச டி20 போட்டியில் சிக்ஸரே அடிக்காத 7 வீரர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

அம்பாதி ராயுடு

ஐ.பி.எல் தொடரில் ராயுடு பல முறை தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாலய சிக்ஸர்கள் விளாசி உள்ளார். ஆனால் ராயுடுவிற்கு சர்வதேச அளவில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 5 போட்டிகளில் 4 இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்துள்ளார். அதில் 5 பவுண்டரிகள் உட்பட 42 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அன்ட்ரூ ஸ்ட்ராஸ்

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ், அவர் விளையாடிய காலத்தில் டாப் பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கினார். தென்னாபிரிக்காவில் பிறந்த இந்த இடதுகை பேட்ஸ்மேன் இங்கிலாந்து நாட்டிற்காக 4 டி20 போட்டிகளில் 73 ரன்கள் அடித்துள்ளார். அதில் 9 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும்.

மைக்கல் வாகன்

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கல் வாகன். வாகன் தன்னுடைய நாட்டிற்காக 2 சர்வதேச டி20 போட்டியில் 27 ரன்கள் சேர்த்தார். டி20ஐயில் வாகனின் 4 பவுண்டரிகள் மற்றும் 0 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

இமாம் உல் ஹக்

நடப்பு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருகிரார். 43 ஓடிஐயில் 16 சிக்ஸர்கள் பறக்கவிட்டிருக்கிரார். ஆனால் அவருக்கு 20 ஓவர் போட்டியில் அவ்வப்போது வாய்ப்பு வழங்கப்பட வில்லை. ஆடிய 2 டி20 போட்டியில் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே அவரால் அடிக்க முடிந்தது.

ஸ்டீபன் பிளம்மிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் ஸ்டீபன் பிளம்மிங், ஐ.பி.எலின் சிறந்த பயிற்சியாளராக திகழ்கிறார். நியூசிலாந்து அணியின் அதிரடி மற்றும் சிறந்த பேட்ஸ்மேனாக இவர் இருந்தார். பிளம்மிங் 5 சர்வதேச டி20யில் பங்கேற்றுள்ளார். அதில் அவர் அடித்த 110 ரன்களில் 80 ரன்கள் பவுண்டரி மூலம் வந்தது. ஒரு சிக்ஸர் கூட அவர் அடிக்கவில்லை.

ரியான் மெக்லரன்

தென்னாபிரிக்கா அதிரடி ஆல்ரவுண்டர் மெக்லரன் ஐ.பி.எல் தொடர் மூலமாக தான் பிரபலம் அடைந்தார். பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தன் சிறப்பை அளித்தார். தேசிய அணிக்காக அவர் 12 டி20 போட்டிகளில் கலந்து கொண்டார். அதில் 4 இன்னிங்சில் மட்டுமே அவரு பேட்டிங் வாய்ப்புக் கிடைத்தது. அதில் எந்த ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் அடிக்காமல் 9 ரன்கள் சேர்த்தார்.

மர்வான் அட்டப்பட்டு

இலங்கை அணியின் முன்னாள் வீரரான அட்டப்பட்டு, அந்நாட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டில் 90 டெஸ்ட் மற்றும் 268 ஓடிஐயில் ஆடியுள்ளார். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன அட்டப்பட்டு தன்னுடைய முதல் டி20ஐயில் வெறும் 5 ரன்கள் மட்டுமே அடித்தார். சோகம் என்னவென்றால் அது தான் அவருடைய கடைசி போட்டியாக அமைந்தது.