2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்புள்ள 6 நட்சத்திர வீரர்கள்

0
227
Natarajan and Dhawan

2021 டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது. 2013க்கு பிறகு, இம்முறை ஐசிசி கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம் போல இந்திய அணி முக்கியப் போட்டியில் சோக் செய்து முதல் சுற்றுடன் வெளியேறியது. விராட் கோஹ்லி மற்றும் ரவி சாஸ்திரி தங்களுடைய பொற்றுபுகளையும் இறக்கி வைத்து விட்டனர். இந்திய அணியின் புதிய டி20ஐ கேப்டனாக ரோஹித் சர்மாவும், புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பையில் ஒரு சில நட்சத்திர மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களை பிசிசிஐ ஒதுக்கியது. இந்திய அணி விரைவில் வெளியேறியதற்கு இதுவும் ஓர் காரணம் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் நேர்காணல் ஒன்றில், “ அணியை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கோ அல்லது கேப்டன் விராட் கோஹ்லிக்கோ இல்லை. அது முழுக்க முழுக்க தேர்வுக் குழுவின் முடிவே ” என்று வெளிப்படையாக உண்மையை உடைத்தார்.

- Advertisement -

அடுத்த முறையாவது திறமை வாய்ந்த வீரர்களுக்கு தகுந்த வாய்ப்புக் கொடுத்து, ரோஹித் & கோ கோப்பையை உயர்த்தும் என்று நம்புவோம். 2021 டி20 உலகக்கோப்பையில் கலந்து கொள்ளாத வீரர்கள் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் களமிறங்க வாய்ப்புள்ளது. அந்த 6 வீரர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

ஷ்ரேயாஸ் ஐயர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஃபீல்டிங் செய்யும் போது ஏற்ப்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக தன் முக்கிய பொறுப்புகளை ஐயர் இழந்தார். டெல்லி கேபிட்ல்ஸின் கேப்டன் பொறுப்பும், இந்திய அணியில் தன் இடமும் பறிபோனது. சென்ற டி20 உலகக்கோப்பையில் கூட, அவர் ரிசர்வ் வீரராக தான் அணியுடன் பயணித்தார். அடுத்து வரும் போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் அணிக்குள் நுழைவார் என்று எதிர்பார்க்கலாம்.

யுஸ்வேந்திர சாஹல்

2021 டி20 உலகக்கோப்பையின் இந்திய அணியில், சாஹல் இடம்பெறாதது மிகப் பெரிய ஆச்சர்யத்தை உண்டாகியது. போட்டிகள் அனைத்தும் யுஏஇக்கு மாற்றப்பட்ட பின்னர், சாஹல் அற்புதமாக பதிவீசி விக்கெட்டுகளை அல்லினார். அதன் பின்பும் பிசிசிஐ அவரை நிராகரித்தது. முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி மோசமாகப் பந்துவீசியது. இவர் இருந்திருந்தால் மிடில் ஓவரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இவர் மீண்டும் அனிக்குள் வந்துள்ளார்.

- Advertisement -

தங்கராசு நட்ராஜன்

இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நட்ராஜன், இந்திய அணியின் எக்ஸ் – பேக்டராக திகழ்ந்திருப்பார். துரதிஷ்டவசமாக காயாம் ஏற்ப்படாதால் அவர் ஐ.பி.எல் தொடர் முதலே விலகிக்கொண்டார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அனைத்து ஃபார்மட்டிலும் களமிறங்கி அமர்களப் படுத்தினார். தன்னுடைய அறிமுகப் போட்டியை ஆடிய ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் அடுத்த வருட டி20 உலகக்கோப்பையில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

தீபக் சாஹர்

ஸ்ரேயாஸ் ஐயரைப் போல இவரும், சென்ற டி20 உலகக்கோப்பையில் ரிசர்வ் வீரராக இணைந்தார். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பவர்பிளேவில் விக்கெட் வீழ்த்தி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தரக் கூடிய வீரர். சுற்றுப்பயணப் போட்டிகளில் தன் முழு திறனையும் வெளிப்படுத்தி உலகக்கோப்பை அணிக்குள் நுழையும் திறமை இவருக்கு உள்ளது.

அக்ஷர் பட்டேல்

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையின் முதன்மை இந்திய அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பின்னர் ஷார்துல் தாக்கூர் அவர் இடத்தைப் பிடித்தார். கிடைத்த வாய்ப்பை அக்ஷர் பட்டேல் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் தன் சிறப்பை வெளிப்படுத்தினார். டெல்லி அணிக்காக ஐ.பி.எலில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பங்களித்துள்ளார்.

ஷிக்கர் தவன்

ஐசிசி தொடர்களுக்குப் பெயர் போனவர், ஷிக்கர் தவன். கடந்த இரு ஐ.பி.எல் சீசனில் டாப் ரன் ஸ்கோரராக இருந்தும், பிசிசிஐ அவரை அணிக்கு அழைக்கவில்லை. கிஷான், ராகுல், ரோஹித் மற்றும் சில அதிரடி ஆட்டக்காரர்கள் இருப்பதால் தவானுக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பது கூடுதல் லாபம் தான். அதுத வருடம் இந்திய அணிக்கு பணியாற்ற இவர் திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.