சையத் முஷ்டக் அலி தொடரில் கேப்டன்களாக செயல்படும் 6 ஐ.பி.எல் நட்சத்திர வீரர்கள்

0
90
Jayadev Unadkat and Ruturaj Gaikwad

2021 ஐ.பி.எல் தொடர் கொரோனா காலக்கட்டத்திலும் பாதுகாப்பாக முடிவடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. 2020 சீசனில்ல் மோசமான ஆட்டதை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அதற்கடுத்த ஆண்டே சிறப்பாக ஆடி கம்பேக்கிற்கு பெயர் போனவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்தது. தற்போது அனைத்து அணிகளின் கவனமும் மெகா ஏலத்தில் உள்ளது. அதற்கு முன் பிசிசிஐ, 38 அணிகள் பங்கேற்கும் சையத் முஸ்டக் அலி தொடரை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. 6 ஐ.பி.எல் நட்சத்திரங்கள் இத்தொடரில் கேப்டன்களாக செயல்படுகின்றனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

ருதுராஜ் கெய்க்வாட்

2021 ஐ.பி.எல் தொடர், ருதுராஜ் கெய்க்வாடுக்கு மிகவும் சிறப்பாகவே அமைந்தது. 16 போட்டிகளில் 635 ரன்கள் குவித்து ஆர்ஞ் கேப்பையும் வென்றார். சையத் முஸ்டக் அலி தொடரில் இவர் மகாராஷ்டிரா அணியை வழிநடத்துகிறார். முதல் 3 போட்டிகளில் அரை சதம் விளாசி அதிரடியான ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவும் இவருக்கு அழைப்பு வந்துள்ளது. அடுத்த ஆண்டு இவரை, சி.எஸ்.கே நிர்வாகம் நிச்சயம் தக்க வைத்துக் கொள்வர்.

- Advertisement -

சஞ்சு சாம்சன்

அதிரடி வீரர் சஞ்சு சாம்சன், சையத் முஷ்டக் அலி தொடரில் கேரளா அணியின் கேப்டனாக செயல்படுகிறார். 2021 ஐ.பி.எல் தொடரில் இவர் அற்புதமாக ஆடினார். அனைத்து சீசனை காட்டிலும் 2021ல் தான் இவர் அதிக ரன்கள் விளாசியுள்ளார். 14 போட்டியில் 484 ரன்கள் அடித்தார். இருப்பினும் அவர் வழிநடத்திய ராஜஸ்தான் ராயல்ஸால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இயலவில்லை.

ஜெய்தேவ் உனத்கட்

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர், ஜெய்தேவ் உனத்கட். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர், சென்ற ஐ.பி.எலில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு 4 விக்கெட்டுகள் எடுத்தார். இவர் சையத் முஸ்கட் அலியில் சௌராஷ்டிரா அணியின் கேப்டனாக திகழ்கிறார்.

மனிஷ் பாண்டே

நடந்து முடிந்த ஐ.பி.எலில் இவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. எட்டு போட்டிகளில் 292 ரன்கள் சேர்த்தார். இவரது நிதான ஆட்டம் அணிக்கு எந்த பயனையும் அளிக்கவில்லை. ஆகையால் அந்நகர்வாகம், ஐ.பி.எல் இரண்டாம் பாதியில் இவரை ஒதுக்கியது. கடைசி போட்டியில் கேன் வில்லியம்சன் இல்லாத காரணத்தால் இவர் சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்தினார். தற்போது நடந்து வரும் சையத் முஸ்கட் அலி தொடரில், கர்நாடகா அணியை தலைமை தாங்குகிறார்.

- Advertisement -

கே.எஸ்.பரத்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ்.பரத், சையத் முஸ்கட் அலியில் ஆந்திரா அணியின் கேப்டனாக பங்கேற்கிறார். யுஏஇயில் நடைபெற்ற போட்டிகளில் இவர் சிறப்பாக பேட் செய்து அனைவரது கவத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். ஒருவேளை பெங்களூர் அணி இவரை தக்க வைக்கவில்லை எனில் ஆண்டு ஏலத்தில் இவர் பெரிய தொகைக்கு வாங்கப்படுவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

சௌரப் திவாரி

2021 ஐ.பி.எல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக முடிந்தது. மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா ரன்கள் சேர்க்கத் தவறினார். அவரின் இடத்தை, பெரிதும் போற்றப்படாத சௌரப் திவாரி நிரப்பினார். சையத் முஸ்டக் அலி டிராபியில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதும்