தங்கள் நெருங்கியவர்களை இழந்த பின்பும் விரைவில் கிரிக்கெட் ஆட வந்த ஆறு வீரர்கள்

0
242
Mohammad Siraj and Rishabh Pant

கிரிக்கெட் விளையாட்டை பொருத்தவரை எந்த அளவு உடல் உறுதி தேவைப்படுகிறதோ அதே அளவுக்கு மன உறுதியும் தேவைப்படும். உடலளவில் சரியாக 100 சதவீதம் இல்லாதவர்கள் கூட களத்தில் சிறப்பாக விளையாடியது உண்டு. ஆனால் ஒரு வீரர் மனதளவில் சிறப்பாக இல்லை என்றால் அவரால் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்த முடியாது. சில நேரத்தில் வீரர்களின் மன உறுதியை அதிகமாக பாதிக்கும் செயல்கள் நிச்சயம் நடக்கும். நெருக்கமானவர்களின் இழப்போ அல்லது இது போன்று வேறு சில சம்பவங்களை அந்தந்த வீரர்களின் மன வலிமையை பாதிக்கக்கூடும். ஆனால் இதுபோன்ற நிலையில் இருந்து சீக்கிரம் மீண்டு வந்து கிரிக்கெட்டில் அசத்திய ஆறு முக்கிய வீரர்களை இங்கு காண்போம்.

சச்சின் டெண்டுல்கர்

கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் போது சச்சின் டெண்டுல்கரின் தந்தையார் மரணமடைந்தார். இதனால் அணியில் இருந்து விடுப்பு பெற்று தனது தந்தையின் இறுதிக் காரியங்களை கவனித்துக் கொண்டிருந்த டெண்டுல்கர், சில நாட்களிலேயே அணிக்கு திரும்பி கென்யா அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் சதம் கடந்தார்.

- Advertisement -

விராட் கோலி

தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி தனது இளம் வயதில் டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி கொண்டிருந்தார். அந்த நாளின் ஆட்டம் முடிந்ததும் தனது தந்தையார் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் டெல்லி அணி தோல்வி பெறுவதை தவிர்ப்பதற்காக அடுத்த நாள் ஆட்டத்தை தொடர்ந்து அதில் 90 ரன்கள் எடுத்தார்.

ரிஷப் பண்ட்

கடந்த 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது தனது தந்தையை இழந்தார். இருந்தாலும் சில நாட்களிலேயே திரும்ப வந்து தன்னுடைய சிறப்பான ஆட்டங்களை தொடர்ந்து டெல்லி அணிக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார். அந்த தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக 2 அரைசதம் கடந்தார்.

அசிப் அலி

கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த போது அசிப் அலியின் 2 வயது குழந்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவியது. இருந்தாலும் அலி தன்னுடைய பெயரை 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இணைத்துக்கொண்டு பாகிஸ்தான் அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடினார்.

- Advertisement -

துஷார் டெஷ்பாண்டே

கடந்த 2019ஆம் ஆண்டு சையது முஷ்டாக் அலி தொடர் நடந்து கொண்டிருக்கும்போது துஷார் டெஷ்பாண்டே தனது தாயாரை இழந்தார். இருந்தாலும் அவர் அணியிலிருந்து விடுப்பு எடுக்காமல் முழுத் தொடரையும் தன்னுடைய அணிக்காக விளையாடி அந்தத் தொடரில் தனது அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக வலம் வந்தார்.

முகமது சிராஜ்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்த முகமது சிராஜ், தன்னுடைய தந்தையின் மரணச் செய்தியைக் கேட்ட பிறகும் அணியிலிருந்து விடுப்பு எடுக்காமல் அணியிலேயே தொடர்ந்தார். கடைசி டெஸ்டில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க அந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சிராஜ்.

- Advertisement -