இனிமேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடவே மாட்டார் என்று நினைத்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்த ஆறு நபர்கள்

0
4780
Ravi Rampaul and Ravichandran Ashwin

டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஓமன் மற்றும் அமீரக மைதானங்களில் தொடங்க இருக்கிறது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரசிகர்கள் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் போதே தொடரில் பங்கேற்க போகும் அத்தனை அணிகளும் தங்கள் சார்பாக விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டது. இனிமேல் டி20 கிரிக்கெட்டில் இவர்களால் விளையாடவே முடியாது என்று ரசிகர்கள் நினைத்த பலர் இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக வெவ்வேறு நாட்டு அணிகளில் இடம் பெற்றுள்ளார். அப்படி அதிர்ச்சி அளிக்கும் விதமாக டி20 உலகக் கோப்பைக்கான ஸ்குவாட் பட்டியலில் இடம்பெற்ற 6 வீரர்களை பற்றி பார்ப்போம்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

வெறித்தனமான இந்திய ரசிகர்கள் கூட எதிர்பார்க்காத பெயர் அஸ்வின். சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இனி வரவே மாட்டார் என்று பலரும் நினைத்த நிலையில் தற்போது உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார் அஸ்வின். கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் விளையாடிய அஸ்வின் ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதன் காரணமாக தற்போது டி20 உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ரவி ராம்பால்

2011 உலக கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ரவி ராம்பால். கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறை கூட மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியதில்லை. அப்படியிருக்கும்போது இந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

டைமல் மில்ஸ்

இங்கிலாந்து அணியை சேர்ந்த டைமில் மில்ஸ் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு ஒருமுறை கூட சர்வதேச டி20 கிரிக்கெட் விளையாடியது இல்லை. ஆனால் இங்கிலாந்தில் நடந்த t20 பிளாஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் இங்கிலாந்து நிர்வாகம் இவருக்கு தன்னை நிரூபிக்க மற்றொரு வாய்ப்பை டி20 உலகக்கோப்பை அணியில் எடுத்ததன் மூலம் கொடுத்துள்ளது.

டேவிட் வீஸே

ஒரு காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடியவர் டேவிட் வீஸே. கடந்த 2016 டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடியவர். ஆனால் இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் இவர் நமீபியா அணிக்காக விளையாடி இருக்கிறார். தகுதிச்சுற்று போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட இவரது ஆல்ரவுண்டர் திறமை கண்டிப்பாக உதவி செய்யும்.

- Advertisement -

ஹமீத் ஹாசன்

ஆப்கானிஸ்தான் அடிக்காத கிரிக்கெட் விளையாடி வரும் இவர் கடந்த 2016 முதல் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கூட ஆப்கானிஸ்தான் அணிக்கு விளையாடியது கிடையாது. அப்படியிருந்தும் தற்போது இவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 22 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார் ஹமித் ஹாசன்.

தவ்லத் ஸத்ரான்

பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வண்ணமாக டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் தவ்லத் ஸத்ரான். கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அணிக்காக விளையாடியவர் இவர். இதுவரை 34 டி20 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் இந்த உலக கோப்பை தொடரில் எவ்வாறு ஆப்கானிஸ்தான் அணிக்கு பங்களிக்க போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.