ஆறு டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் விளையாடி ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட காத்திருக்கும் வீரர்கள்

0
2858
Rohit Sharma and Chris Gayle

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் விளையாடப் போகும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டுவிட்டது. இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட இந்த தொடர் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக அமீரக மற்றும் ஓமன் நாட்டு மைதானங்களில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் தொடங்குவதால் இந்தத் தொடருக்கு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை 6 முறை டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று முடிந்து தற்போது ஏழாவது தொடர் தொடங்க இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் 6 முறை விளையாடியும் தற்போது ஏழாவது முறை விளையாட காத்திருக்கும் ஆறு முக்கியமான வீரர்களை குறித்து இங்கு பார்க்கலாம்.

1.ரோகித் சர்மா

இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரர் ரோகித். இந்திய அணிக்காக லிமிட்டட் ஓவர் போட்டிகளில் இவர் படைத்த சாதனைகள் மிக அதிகம். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 4 சதங்கள் விளாசியுள்ளார் ரோகித். வேறு எந்த பேட்டிங் வரும் இத்தனை சதங்களை அடித்தது கிடையாது. தற்போது மிகச் சிறப்பான பார்மில் உள்ள ரோஹித் டி20 உலகக் கோப்பை தொடரிலும் அதே தொடர்வார் என்று ரசிகர்களின் நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 28 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடி சுமார் 673 ரன்கள் குவித்துள்ளார் ரோகித்.

- Advertisement -

2.டுவைன் பிராவோ

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ. இவரும் தனது ஏழாவது டி20 உலக கோப்பை தொடரில் ஆட இருக்கிறார் உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை பல முறை நிரூபித்துள்ளார் பிராவோ. இரண்டு முறை டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த பிராவோ இதுவரை 29 டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் 504 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இந்த போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார் பிராவோ.

3.கிறிஸ் கெய்ல்

டி20 போட்டிகள் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வரும் பெயர் கெயில். டி20 போட்டிகளில் இவர் வைத்துள்ள சாதனைகளை இனி எந்த வீரரும் தகர்ப்பது கடினமான காரியம் தான். சுமார் 14 ஆயிரம் ரன்களை டி20 போட்டிகளில் எடுத்துள்ள இவர் தன்னுடைய ஏழாவது உலக கோப்பை தொடரில் ஆட இருக்கிறார். சுமார் 29 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடியுள்ள இவர் 920 ரன்களை எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்து உள்ள வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இவர் இந்த உலக கோப்பை தொடர் முடியும் போது முதல் இடத்திற்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

4.மஹ்மதுல்லா

வங்கதேச அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் மஹ்மதுல்லா. வங்கதேசம் அணி கத்துக்குட்டி அணி என்பதிலிருந்து எழுச்சிபெற தொடங்கிய காலத்திலிருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் வீரர் இவர். இதுவரை இருபத்திநான்கு டி20 உலகக் கோப்பை போட்டிகளில் சுமார் 194 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வங்கதேச அணி சிறப்பாக செயல்படுவதற்கு இவருடைய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாக இருக்கும்.

- Advertisement -

5.ஷகிப் அல் ஹசன்

உலகத்தின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் தனது ஏழாவது டி20 உலக கோப்பை தொடரை ஆட இருக்கிறார். வங்கதேச அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சூப்பர் ஸ்டாராக திகழும் இவர் இந்த தொடரில் ஆட போகும் ஆட்டம்தான் வங்கதேச அணியின் உலக கோப்பை கனவை பூர்த்தி செய்ய போகிறது. இவரை 25 டி20 உலக கோப்பை போட்டிகளில் 567 ரன்கள் மற்றும் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷகிப்.

6.முஷ்பிகுர் ரஹீம்

வங்கதேச அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹீம். வங்கதேச அணியின் பேட்டிங்கில் பல ஆண்டு காலமாக தனது தோளில் சுமந்து வருகிறார் இவர். தன்னுடைய 2வது டி20 உலகக் கோப்பை தொடரை எதிர்நோக்கி காத்திருக்கும் இவர் இதுவரை 25 போட்டிகளில் 258 ரன்கள் எடுத்துள்ளார். இந்த முறை விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு வீரர்கள் இருப்பதால் ரஹீம் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி அதிக ரன்கள் குவித்து வங்கதேசத்தின் உலக கோப்பை கனவை நனவாக்குவார் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

- Advertisement -