6இன்னிங்ஸ் 5சதம்.. வார்னர் மிரட்டல் பேட்டிங்.. பாகிஸ்தானுக்கு ஆஸி முதல் நாளிலே செக்!

0
238
Warner

ஆஸ்திரேலியாவின் கோடைக்காலத்தில் அந்த நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி இன்று அதிவேக பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் பாகிஸ்தான் தரப்பில் இரண்டு இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் அமீர் ஜமால் மற்றும் குர்ரம் சேஷாத் இருவர் அறிமுகமானார்கள். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஒரு மாற்றமாக கேமரூன் கிரீன் இடத்தில் மிட்சல் மார்ஸ் இடம் பெற்றார்.

அனுபவமற்ற பாகிஸ்தானின் பந்துவீச்சு தாக்குதலை வெகு எளிதாக சமாளித்து ஆஸ்திரேலியாவின் துவக்க ஜோடி டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் சிறப்பாக ரன் சேர்த்தார்கள்.

- Advertisement -

ஒரு முனையில் உஸ்மான் கவாஜா பொறுமையாக விளையாட இன்னொரு முனையில் டேவிட் வார்னர் தன்னுடைய வழக்கமான அதிரடியில் மிரட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் 41 பந்தில் அரைசதத்தை கடந்து, தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் மற்றும் 150 ரன்கள் என கடந்தார்.

இதற்கு நடுவில் உஸ்மான் கவாஜா 41, மார்னஸ் லபுஷன் 16, ஸ்மித் 31, டிராவிஸ் ஹெட் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இன்னொரு முனையில் தனது கிரிக்கெட் கேரியரின் கடைசி தொடரில் விளையாடும் டேவிட் வார்னர் 211 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 164 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 84 ஓவர்களில் 346 ரன்கள் குவித்து இருக்கிறது. மிட்சல் மார்ஸ் 15, அலெக்ஸ் கேரி 14 ரன்கள் என களத்தில் நிற்கிறார்கள்.

பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜலால் 2, ஷாகின் அப்ரிடி, குர்ரம் சேஷாத், பாகிம் அஷ்ரப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விளையாடிய கடைசி ஆறு இன்னிங்ஸ்களில் டேவிட் வார்னர் அதிரடியாக 144, 113, 55, 154, 335*, 164 என ஐந்து சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு முச்சதமும் அடக்கம். பாகிஸ்தான் சிறப்பாக பேட் செய்யாவிட்டால் இந்த டெஸ்டில் வெல்வது கடினம் என்கின்ற நிலை முதல் நாளிலே உருவாகிவிட்டது!

- Advertisement -