“மன்கடிங்” எனப்பட்ட ரன்-அவுட் வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்தாத 6 பிரபல வீரர்கள்!

0
1665
Ashwin

பந்து வீச்சாளர் பந்துவீசி முடிக்கும் முன், பந்துவீச்சாளர் முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், கிரீசை தாண்டி வெளியே சென்றால், பந்து வீச்சாளர் பந்து வீசுவதை நிறுத்திவிட்டு அவரை ரன் அவுட் செய்யலாம். சில மாதங்களுக்கு முன்பு இந்த ரன் அவுட் முறைக்கு மன்கட் என்று ஒரு இந்திய வீரரின் பெயரும், இப்படி செய்வது விளையாட்டின் உத்வேகத்தை பாதிக்கும் என்று பரவலான கருத்தும் இருந்தது.

தற்பொழுது ஐசிசி இந்த முறையில் செய்யப்படும் ரன் அவுட்டை இனி மன்கட் ரன் அவுட் என அழைக்கக் கூடாது என்றும், ரன் அவுட் என மட்டுமே அழைக்க வேண்டும் என்றும், இது தவறான ஒரு வழிமுறை அல்ல என்றும் விதிகளைத் திருத்தி இருந்தது. ஆனாலுமே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சமீபத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மா இப்படி ரன் அவுட் செய்ததற்கு இங்கிலாந்து தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் இப்பொழுது வரை வந்து கொண்டுதான் இருக்கிறது என்பது தனி. இப்படி ரன் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்து அந்த வாய்ப்பை பயன்படுத்தாத 6 பிரபல வீரர்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரை தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -
  1. ரவிச்சந்திரன் அஸ்வின்

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஸ்வின், ராஜஸ்தான் அணியின் வீரர் ஜாஸ் பட்லரை இந்த முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் 2020ஆம் ஆண்டு பெங்களூர் அணி வீரர் ஆரோன் பின்ச்சை இப்படி ரன் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்தும் செய்யவில்லை.

  1. கேத்தரினா புருன்ட் 2020ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்த இங்கிலாந்து வீராங்கனை சவுத் ஆப்பிரிக்கா வீராங்கனை சுனே லுஸ் என்ற வீராங்கனையை இப்படி ரன் அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தும் செய்யவில்லை.
  2. க்ருனால் பாண்டியா 2019ஆம் ஆண்டு மும்பை பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலை ரன் அவுட் செய்ய கிடைத்த இப்படியான வாய்ப்பை க்ருனால் பாண்டியா பயன்படுத்தவில்லை.
  3. கிறிஸ் கெய்ல் 2012ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் இயான் மார்கனை இப்படியான முறையில் ரன் அவுட் செய்ய கிடைத்த வாய்ப்பை, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் வேடிக்கையாக மறுத்துவிட்டார்.
  4. அமீர் சோகைல் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றில் பாகிஸ்தான் வீரர் ஆமீர் சோகைல் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்சை எச்சரிக்கை மட்டும் செய்து, இந்த முறையில் ரன் அவுட் செய்யாமல் விட்டார்.
  5. கோர்ட்னி வால்ஷ்

1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில், வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், பாகிஸ்தான் வீரர் சலீம் ஜாபரை இப்படியான முறையில் ரன் அவுட் செய்யாமல் தவிர்த்தார் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கோர்ட்னி வால்ஷ்!