2021ல் நாடு மாறி கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த 6 பிரபல வீரர்கள்

0
103
Unmukt Chand and David Wiese

கொரோனா போராட்டத்திற்குப் பின்னர் 2021ல் கிரிக்கெட் போட்டிகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது. மேலும், 2021ஆம் ஆண்டில் பல சிறப்பான தருணங்களும் இடம்பெற்றன. இந்திய கிரிக்கெட் அணி வரலாறு பேசும் வெற்றிகளை கப்பா & லண்டனில் பதிவுசெய்துது. ஐ.பி.எலில் சிறந்த கம்பேக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் நிகழ்த்தி நான்காவது கோப்பையை முத்தமிட்டது. இதுபோல பல அற்புதமான சம்பவங்களை ரசிகர்கள் கண்டு கழித்தனர்.

கிரிக்கெட்டில் நாடு மாறி வேறு அணிக்காக விளையாடுவது சாதாரணமான ஒன்று. 2019 உலகக்கோப்பையில் பென் ஸ்டோக்ஸ், தான் பிறந்த நாட்டிற்க்கு எதிராக அரை சதம் விளாசிய இங்கிலாந்து அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். 2021ஆம் ஆண்டு நாடு மாறி கிரிக்கெட் ஆட ஆரம்பித்த வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

உன்முக்த் சந்த்

இந்திய அணிக்காக யு – 19 உலககோப்பை வென்ற கேப்டன் உன்முக்த் சந்த், சமீபத்தில் அமெரிக்கா நாட்டில் குடியேறினார். பிசிசிஐயுடன் தன் உறவை முடித்துக் கொண்டு அமெரிக்கா அணிக்காக ஆட ஆரம்பித்தது விட்டார். மேலும், இந்தியாவில் பிறந்து பிக் பேஷ் லீக் ஆடும் முதல் வீரரும் இவரே.

டேவிட் வீஸ்

முன்னாள் தென்னாபிரிக்க வீரரான டேவிட் வீஸ், 2021 டி20 உலகக்கோப்பையில் நமீபியா அணிக்காக ஆடினார். தன் அபார பேட்டிங்கால் நமீபியா அணியை சூப்பர் 12 சுற்றுக்கு அழைத்துச் சென்றார். கடுமையான அச்சுற்றின் 5 போட்டிகளில் 1 ஒரே வெற்றியை மட்டுமே பெற்றது.

ஜேட் டெர்ன்பேச்

2014 இந்தியா – இங்கிலாந்து தொடரில் இவர் பங்கேற்றது நம் அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு தற்போது தான் இவர் கிரிக்கெட்டுக்கு வந்துள்ளார். இங்கிலாந்து அணியை விட்டுவிட்டு இத்தாலி அணியில் இணைந்துவிட்டார்.

- Advertisement -

அம்ஜத் கான்

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர், அம்ஜத் கான். தான் பிறந்த நாட்டான டென்மார்க்கு இவர் திரும்பியுள்ளார். டென்மார்க் கிரிக்கெட் அணிக்காக 2021ல் இவர் அறிமுகப் போட்டியில் களமிறங்கினார்.

சித்தார்த் திரிவேதி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இவர் பல சாதனைகளை படைத்து அனைத்து திறமையான வீரர்களுக்கு மத்தியிலும் நன்கு வளர்ந்தார். இருப்பினும் பிசிசிஐயால் தடை செய்யப்பட்ட பின்பு, இவரின் கிரிக்கெட் வாழ்க்கை தரம் புரண்டது. உன்முக்த் சந்தைப் போல இவரும் இந்திய நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தன் கிரிக்கெட் கேரியரை தொடர்ந்தார்.

- Advertisement -

ஸ்மித் பட்டேல்

2021 யு – 19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் கேப்டன் உன்முக்த் சந்தோடு இவரும் இணைந்து விளையாடினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஸ்மித் பட்டேலால் சீனியர் அணிக்கு முன்னேற இயலவில்லை. போதிய வாய்ப்புகள் இல்லாததால் இவரும் அமெரிக்க அணிக்காக ஆட முடிவு செய்து கிளம்பிவிட்டார்.