கண்டிப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் பலர் நினைத்தும் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்காமல் போன ஆறு வீரர்கள்

0
165
Yuzvendra Chahal and Faf du Plessis

அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த தொடர் கொரோனா காரணமாக ஓமன் மற்றும் அமீரக மைதானங்களில் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக 16 அணிகள் 15 பேர் கொண்ட தங்களது ஸ்குவாடை வெளியிட்டுவிட்டனர். பல முக்கிய வீரர்கள் இந்த தொடரில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த பல விருதுகள் இந்த தொடரில் ஆட முடியாத படியாகியுள்ளனர். அப்படி இன்னும் ஓய்வு பெறவில்லை என்றாலும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு புறக்கணிக்கப்பட்ட ஆறு முக்கிய வீரர்கள் குறித்து பார்ப்போம்.

ஷிகர் தவான்

பல ரசிகர்கள் புருவங்களை உயர்த்தும் படியாக ஷிக்கர் தவானுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐசிசி தொடர் என்றாலே சிறப்பாக விளையாடும் ஷிகர் தவன் அணியில் புறக்கணிக்க ஏற்பட்டிருப்பது பல ரசிகர்கள் கவலை தருகிறது. மேலும் இந்த ஆண்டு நடந்த முதல் பகுதி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார் தவான். அதுவுமில்லாமல் கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தவான். பல ஆண்டு காலங்கள் இந்திய அணி சிறப்பாக விளையாடியும் தவான் டி20 உலகக் கோப்பை தொடருக்கு புறக்கணிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

யுஸ்வேந்திர சஹால்

மற்றொரு அதிர்ச்சிகரமான வெளியேற்றம் யார் என்று பார்த்தால் இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் சஹால். பல ஆண்டு காலமாக இந்தியாவுக்கும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணித்தும் நம்பர்-1 ஸ்பின்னராக பங்களித்து வந்தவர் இவர் ஆனால் இவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ராகுல் சஹாரை t20 உலகக்கோப்பை தொடருக்கு லெக் ஸ்பின்னராக இந்திய அணி அறிவித்துள்ளது.

பாப் டூப்ளெசிஸ்

பல ஆண்டு காலமாக தென்னாப்பிரிக்காவிற்கு சிறந்த கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் பங்காற்றி வந்தவர் டூப்ளெசிஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று டி20 உலகக் கோப்பை தொடருக்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது இவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தென் ஆப்பிரிக்கா அணி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இம்ரான் தாஹிர்

தென் ஆப்பிரிக்க அணியின் மற்றொரு முன்னணி வீரர் இவர். தனது சுழற்பந்து வீச்சாளர் பல முன்னணி பேட்டிங் வீரர்களை திணறடித்து இவர் நிச்சயமாக உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் என்று ரசிகர்கள் பலர் நினைத்திருந்தனர். ஆனால் தென்னாபிரிக்கா நிர்வாகம் இவரையும் புறக்கணித்து உள்ளது. இதுபற்றி பேசிய தாகிர் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் ஒரு முறை கூட என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

கிறிஸ் மாரிஸ்

கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்று பல வரலாறுகளை படைத்திருந்தார் மாரிஸ். தேவையான நேரத்தில் குறைந்த பந்துகளில் ரன்களும் அடித்து சில முக்கிய நேரங்களில் விக்கெட்டுகளையும் எடுத்து ஆட்டத்தை அப்படியே தன்பக்கம் மாற்றும் திறமை கொண்டவர் மாரிஸ். ஆனால் இவரை தென் ஆப்பிரிக்க அணி புறக்கணித்துள்ளது அந்த அணிக்கு உலக கோப்பை தொடரில் பெரும் பின்னடைவாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

சோயப் மாலிக்

பாகிஸ்தான் அணிக்காக பல டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் வீரர் மாலிக். ஒருபக்கம் இக்கட்டுகள் சரிந்தாலும் நிதானமாக ஆடி கொடுக்கும் இவரது திறமையும் முக்கியமான நேரங்களில் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து தரும் இவரது ஸ்பின் பவுலிங்கும் பாகிஸ்தான் அணிக்கு பல முக்கியமான போட்டிகளை வென்று கொடுத்துள்ளது. ஆனால் இந்த உலகக் கோப்பை தொடருக்கு இவர் புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு பெரும் வெற்றிடம் மிடில் ஆர்டரில் உருவாகி இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.