5வது டெஸ்ட்.. மழை மற்றும் பனி ஆபத்து எப்படி இருக்கிறது?.. மைதானம் மற்றும் ஆடுகள புள்ளிவிபரம்.. முழு தகவல்கள்

0
167
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி நாளை மறுநாள் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் துவங்க இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்குமே வழக்கமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நகரங்களின் மைதானங்கள் கொடுக்கப்படவில்லை. பெரிய அளவில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறாத மைதானங்களே கொடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த வகையில் கடைசி போட்டி நடைபெறும் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் தட்பவெப்ப நிலை வழக்கமான இந்திய தட்பவெப்ப நிலை போல இருக்காது. இங்கிலாந்து தட்பவெப்ப நிலை போல இருக்கக் கூடியது. எனவே கடைசி டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி உற்சாகமாக காத்திருக்கிறது.

இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் போட்டி துவங்கும் நாளை மறுநாள் கடும் குளிரடிக்கும் என்றும், அன்றைய நாள் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. மேலும் இரண்டாவது இப்படியான வானிலையே காணப்படும்.

மூன்றாவது நாளிலிருந்து கொஞ்சம் வெயில் அடிக்க ஆரம்பிக்கும். அதே சமயத்தில் இரண்டு செஷன் நடைபெற்று முடிந்து மூன்றாவது செஷன் ஆரம்பத்தில் வெளிச்சக் குறைபாடு ஏற்படும். எனவே மின்விளக்குகளின் உதவியுடன் தான் கடைசி செஷனை விளையாட வேண்டும். இதனால் போட்டிக்கு முடிவு எட்டப்படுமா? என்பது தற்பொழுது சந்தேகமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த மைதானத்தில் இதுவரையில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2017 ஆம் ஆண்டு நடைபெற்று இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 300 ரன்கள் எடுக்க, இந்திய அணி 332ரன்கள் சேர்த்தது. இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 137 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து நான்கு விக்கெட் மற்றும் 63 ரன்கள் முதல் இன்னிங்சில் அடித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கே எல் ராகுல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் 111 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க : “மும்பையிடம் செமி பைனல் தோல்வி.. காரணம் கேப்டன் சாய் கிஷோர்தான்”- தமிழக கோச் பரபரப்பு பேட்டி

பொதுவாக தரம்சாலா மைதானத்தின் தட்பவெப்ப நிலை வேகப்பந்துவீச்சாளர்களுக்குசாதகமாக காணப்படும். பந்து குளிரான சூழலில் ஸ்விங் ஆகும். ஆனால் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.