“மும்பையிடம் செமி பைனல் தோல்வி.. காரணம் கேப்டன் சாய் கிஷோர்தான்”- தமிழக கோச் பரபரப்பு பேட்டி

0
695
Kishore

இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபியில் தமிழக அணைக்கு சொல்லிக் கொள்ளும்படி நல்ல ரெக்கார்டுகள் கிடையாது.

ஒரே ஒருமுறை மட்டுமே 1987-88 ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதற்குப் பிறகு 2014-15 ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் இறுதி போட்டியில் கர்நாடக அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த முறை ரஞ்சி சீசனில் கேப்டன் சாய் கிஷோர் தலைமையில் இந்திய அணி 7 ஆண்டுகளுக்கு பிறகு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

முதலில் கால் இறுதிப் போட்டியில் சௌராஷ்ட்ரா அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீட்டில் செயல்பட்டு கேப்டன் சாய் கிஷோர் அணியை வெற்றி பெற வைத்திருந்தார்.

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 106 ரன்களுக்கு ஏழு விக்கெட் என இருந்த மும்பை அணியை தமிழக அணியால் அங்கிருந்து கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த போட்டியில் தமிழக அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 146 ரன்னில் சுருண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசி உள்ள தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்சன் குல்கர்னி “நான் அரை இறுதி காலம் ஆடுகளத்தை பார்த்ததுமே விக்கெட் எப்படி இருக்கிறது என்பது குறித்து புரிந்து கொண்டேன். கால் இறுதியில் எப்படியான விக்கெட் கிடைத்தது என்பதை வைத்து பார்க்கும் பொழுது, இந்த விக்கெட் வேகப்பந்து வீட்டுக்கு சாதகமான விக்கெட் என்பதை நான் உணர்ந்தேன்.

நாங்கள் டாஸ் வென்றோம். பயிற்சியாளராகவும் மும்பைகாரனாகவும் எனக்கு நிலைமைகள் நன்றாக தெரியும். நாங்கள் முதலில் பந்து வீசி இருக்க வேண்டும். ஆனால் எங்கள் கேப்டனுக்கு வித்தியாசமானஉள்ளுணர்வு இருந்தது.

என்ன மாதிரியான ஆடுகளம் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் மும்பை அணியின் மனநிலை எப்படியானது என்பது போன்ற உள்ளீடுகளை மட்டுமே நான் கொடுக்க முடியும். கடைசியில் கேப்டன்தான் ஓனர் அவர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். அவருடைய இந்த முடிவு தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

இதையும் படிங்க : “5வது டெஸ்ட்.. இவரை வச்சு ஜெயிக்கிறோம்.. இந்தியாவுக்கு சம்பவம் இருக்கு” – மெக்கலம் பேட்டி

அதே சமயத்தில் அவர்தான் சௌராஷ்ட்ரா அணிக்கு எதிராக மூன்றாவது பேட்ஸ்மேனாக உள்ளே சென்று அரை சதம் அடித்தார். அப்போது அவருடைய உள் உணர்வு பாசிட்டிவாக அணியின் வெற்றிக்கு உதவியது. இந்த முறை அதே உள் உணர்வு தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதனால் இது குறித்து குறை சொல்லப்போவது இல்லை” எனக் கூறியிருக்கிறார்.