தற்பொழுது இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது கடைசி டெஸ்ட் போட்டி கேப்டன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. தென் ஆப்பிரிக்கா ஆடுகளத்தை மிகவும் தவறாக கணித்து விட்டது என்பதாகவே, அவர்கள் பேட்டிங் செய்த விதம் வெளிப்படுத்தியது.
நேற்று தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அனுபவம் மற்ற பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் கூட, இவ்வளவு குறைந்த ரன்களுக்கு ஆட்டம் இழப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒன்பது ஓவர்களுக்கு 15 ரன்கள் மட்டுமே தந்து ஆறு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். மேலும் இவருடைய பார்ட்னர் பும்ரா மற்றும் முகேஷ் குமார் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா ஒட்டுமொத்தமாக சரிந்து விட்டது.
நேற்று தென் ஆப்பிரிக்க சரிவு பற்றி பேசி உள்ள முகமது சிராஜ் கூறும்பொழுது “காலையில் நான் இந்த ஆடுகளத்தை பார்த்த பொழுது, இது 55 ரன்கள் ஆல் அவுட் ஆகும் ஆடுகளம் என்று நினைக்கவில்லை.வெயில் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தினால், வேகப்பந்து வீச்சுக்கு இவ்வளவு ஒத்துழைப்பு இருக்கும் என நான் நினைக்கவில்லை.
பும்ரா அதிக விக்கெட் எடுக்கவில்லைதான், ஆனால் அவர் ஒரு முனையில் பெரிய அழுத்தத்தை உண்டாக்கினார். அது நான் விக்கெட் எடுக்க உதவியது.
இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சுக்கு நிறைய சாதகம் இருந்தது. எனவே பந்துவீச்சாளர்கள் மேற்கொண்டு பெரிய முயற்சிகள் எதுவும் செய்யக்கூடாது. நாம் சரியான ஒரு லைனில் தொடர்ச்சியாக பந்து வீசும் பொழுது, விக்கெட் தாமாகவே கிடைக்கும். நாம் ஏதாவது புதுப்புது முயற்சிகள் பந்துவீச்சில் செய்தால் அது குழப்பத்தையே உண்டாக்கும்!” என்று கூறி இருக்கிறார்.