52 வருடம்..1039 மேட்ச்.. இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை.. அசத்தும் வீரர்கள்!

0
2915
ICT

இந்திய அணி தற்போது உள்நாட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 276 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மட்டுமே அரை சதம் அடித்தார்.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 51 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகளை முகமது சமி கைப்பற்றினார். அவரது சிறந்த பந்துவீச்சாக ஒருநாள் கிரிக்கெட்டில் இது அமைந்தது.

மேலும் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முகமது சமி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றிய காரணத்தால், இந்திய அணி தனிப்பட்ட முறையில், தன்னுடைய ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்காக இதுவரையில் ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரே மாதத்தில் மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியது கிடையாது.

இந்த நிலையில் தற்பொழுது செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 8 ஓவர்கள் பந்து வீசி 25 ரன்கள் விட்டுத்தந்து குல்தீப் யாதவ் 5 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

அதேபோல ஆசியக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 7 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி, 21 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் தொடர்ச்சியில் தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முகமது சமி 10 ஓவர்களில் 51 ரன்களுக்கு ஐந்து விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

இந்திய அணி 1971 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளையாடி வருகிறது. இதுவரை மொத்தம் 1039 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடி இருக்கிறது. இந்த நெடிய பயணத்தில் இந்திய அணிக்கு இது முதல் முறையாக நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!