36 பந்தில் 50.. வானில் பறந்த சிக்ஸர்கள்.. ரோகித் சர்மா 3 புதிய உலக சாதனை.. பாகிஸ்தான் பந்துவீச்சிலும் பரிதாபம்!

0
799
Rohit

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தற்பொழுது குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டார். இரவில் பனிப்பொழிவு இருக்கின்ற காரணத்தினால் இந்தியாவிற்கு இந்த டாஸ் நல்ல விதமாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி துவக்க ஆட்டக்காரர்கள் இருவரது விக்கெட்டையும் இழந்து இரண்டு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் என்று பலமாக இருந்தது.

இந்த நிலையில் அரைத்ததம் அடித்து இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தன்னுடைய விக்கெட்டை இழக்க, அங்கிருந்து மேற்கொண்டு 31 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து, பாகிஸ்தான அணி 42.5 ஓவரில் 191 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சர்துல் தாக்கூர் தவிர மற்ற ஐந்து பந்துவீச்சாளர்களும் இரண்டு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கில் நான்கு பவுண்டரிகள் அதிரடியாக அடித்து 16 ரன்கள் எடுத்து ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்தில் விளையாடுவதற்கு வந்த விராட் கோலி 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹசன் அலி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

ஒரு பக்கத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியில் வெளுத்து வாங்கினார். சிறப்பாக விளையாடிய அவர் 36 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 50 ரன்கள் அடித்து அசத்தினார்.

ரோகித் சர்மா தன்னுடைய ஒட்டுமொத்த உலகக் கோப்பையில் சேசிங்கில் 12 இன்னிங்ஸ்களில் ஏழு அரை சதம் அடித்திருக்கிறார். இதுவே இந்த வகையில் உலகச் சாதனையாக அமைகிறது. சாகிப் அல் ஹசன் 19 இன்னிங்ஸ்கள் ஏழு அரை சதங்கள், சச்சின் 16 இன்னிங்ஸ்கள் ஆறு அரை சதங்கள், காலிஸ் ஆறு அரை சதங்கள் 18 இன்னிங்ஸ்கள் என்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

மேலும் இந்தப் போட்டியில் சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 300 சித்தர்கள் அடித்தவர் என்கின்ற உலகச் சாதனையை ரோகித் சர்மா படித்திருக்கிறார்.

ரோகித் சர்மா – 246 இன்னிங்ஸ்
கிறிஸ் கெயில் – 252 இன்னிங்ஸ்
சாகித் அப்ரிடி- 342 இன்னிங்ஸ்