ஐசிசி தொடர்களில் ஆட்டநாயகன் விருது வென்ற ஐந்து இளம் இந்திய வீரர்கள்

0
1062
Sachin Tendulkar and Virat Kohli

ஐசிசி சார்பில் 50 ஓவர் உலகக் கோப்பை டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி என்று மூன்று தொடர்கள் நடத்தப்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தொடர் உலகின் கடைக்கோடி ரசிகனின் பார்வையில் முதற்கொண்டு பெற்றுவிடும். ஒவ்வொரு முறையும் பங்கேற்கும் அத்தனை அணிகளும் இந்த தொடரில் இன்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆட வரும். உலகத்தில் உள்ள பல்வேறு மக்களும் கண்டு கழிக்கும் படி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தத் தொடர்களை ஒளிபரப்பும். மேலும் பலர் இந்த தொடர்களை கவனிப்பதால் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்ற ஆசை அத்தனை வீரர்கள் இடத்திலும் இருக்கும். அவ்வாறு ஐசிசி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு மிகவும் இளம் வயதிலேயே ஆட்டநாயகன் விருதை வென்ற 5 இந்திய வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

1.யுவராஜ் சிங் ,18 வயது, 299 நாட்கள் – 2000 சம்பியன்ஸ் டிராபி

2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சந்தித்தது முதலில் பேட் செய்த இந்திய அணி சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது களத்திற்குள் வந்த 18 வயதே ஆன யுவராஜ், தனக்கே உரிய பாணியில் அதிரடியாக ஆடி 84 ரன்கள் குவித்தார். வெறும் 80 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் இந்த ரன்கள் வந்தன. இதன் காரணமாக இந்திய அணி 265 ரன்கள் குவித்தது இந்த இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் ஆர்எஸ் 240 ரன்கள் மட்டுமே குறிக்கும் முடிந்ததால் இந்திய அணி வெற்றி பெற்றது. வெறும் 18 வயதில் யுவராஜ் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐசிசி தொடர்களில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

- Advertisement -

2.சச்சின் டெண்டுல்கர் 18 வயது, 314 நாட்கள் – 1992 உலகக் கோப்பை

உலக கோப்பை என்றாலே அதில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடும் ஆட்டம் பலரது கவனத்தையும் பெறும். அதேபோல 1992ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி சச்சின் டெண்டுல்கரின் அரசாங்கத்தின் உதவியால் 216 ரன்கள் எடுத்தது. சச்சின் அற்புதமாக 62 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அதன் பிறகு ஆடிய பாகிஸ்தான் அணிகள் வெறும் 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தால் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரைசதம் அடித்து அதற்காக ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.

3.சச்சின் டெண்டுல்கர் – 18 வயது 317 நாட்கள் கோப்பை, 1992 உலகக் கோப்பை

அடுத்த ஆட்டத்திலேயே சச்சின் டெண்டுல்கர் மீண்டும் தனது முத்திரையை உலக கோப்பையில் பதிவுசெய்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்த மூன்று நாட்களிலேயே ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டம் தொடங்கியது. இதிலும் சச்சின் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் குவித்தார் இதன் காரணமாக இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆட்டநாயகனாக சச்சின் அறிவிக்கப்பட்டார்.

4.ரோகித் சர்மா – 20 வயது 243 நாட்கள், 2007 டி20 உலகக்கோப்பை

கண்டிப்பாக வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை 2007 t20 உலகக் கோப்பை தொடரில் சந்தித்தது. ஆனால் இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளவிக்கெட்டுகள் என்ற நிலையில் ஆடி வந்த போது தனது அறிமுக ஆட்டத்தில் ரோகித் கண்டார். கேப்டன் தோனியுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 40 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரோகித். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 153 ரன்கள் குவித்து அந்த ஆட்டத்தில் வெற்றியும் பெற்றது. அறிமுக ஆட்டத்திலேயே அரை சுகம் கொடுத்ததற்காக ஆட்டநாயகன் விருது ரோகித்துக்கு வழங்கப்பட்டது.

- Advertisement -

5.விராட் கோலி – 20 வயது 329 நாட்கள், 2009 சாம்பியன்ஸ் டிராபி

அடுத்த சுற்றுக்கு தகுதி பெற ஆட்டத்தை மிகவும் சுலபமாக வென்றாக வேண்டும் என்ற நிலையில் களம் கண்ட இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை சந்தித்தது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை 129 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தனர். ஆனால் 32 எடுப்பதற்கு உள்ளேயே இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து தத்தளித்த இந்திய அணிக்கு விராட் கோலி களமிறங்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். 104 பந்துகளில் 79 ரன்கள் எடுத்ததற்காக விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்திய அணி அந்த ஆட்டத்தில் வெல்லவில்லை என்றாலும் விராட் கோலி தன்னை உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டது இந்த ஆட்டத்தில் தான்.