நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிகாத 5 அதிர்ஷ்டமில்லா வீரர்கள்

0
61
Jalaj Saxena and Hanuma Vihari

இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர், 3 டி20 போட்டிகளுக்கு அடுத்து நடைபெற உள்ளது. நவம்பர் 25ம் தேதி கான்பூரில் முதல் டெஸ்ட்டிலும் டிசம்பர் 3ம் தேதி மும்பையில் இரண்டாவது டெஸ்ட்டிலும் மோதவுள்ளன. இத்தொடரில் சீனியர் வீரர்கள் ரோஹித் ஷர்மா & பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி 2வது டெஸ்ட்டில் இந்திய அணியுடன் இணைய உள்ளார். அதனால் துணை கேப்டன் ரஹானே அணியை வழிநடத்துவார். ஒரு சில இளம் வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டெஸ்ட் அணிக்கு தெரிவாகியுள்ளார். அதே சமயம் ஒரு சில தகுதிவாய்ந்த வீரர்களும் இப்பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. அவர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

ஹனுமா விஹாரி

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஹாரி, அணியில் தேர்வு செய்யாததைக் கண்டு அனைவரும் வியந்தனர். சீனியர் வீரர்கள் இல்லாத பட்சத்தில் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அனைவரும் எண்ணினர். ஆனால் பிசிசிஐ அதற்கு மாறாக முடிவெடுத்தது. நம்முடைய கிரிக்கெட் வாரியம், ‘ இந்தியா ஏ ‘ அணியில் அவரின் பெயரை சேர்த்தது.

- Advertisement -

ஷர்துல் தாக்கூர்

Shardul Thakur

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆடுகளாங்களில் அதிரடியாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து அனைவரையும் கவர்ந்தார். ஆல்ரவுண்டர் தாக்கூருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதா அல்லது அவரை தேர்தெடுக்கவில்லையா என்பதைப் பற்றி பிசிசிஐ எந்த ஒரு விளக்கத்தையும் தரவில்லை. மும்பையைச் சேர்ந்த வீரரை, தான் அதிகம் ஆடிப் பழகிய மைதானத்தில் ஆட வைத்திருக்கலாம் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர்.

ஜெயதேவ் உனத்கட்

சென்ற ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் உனத்கட் அற்புதமாக விளையாடினார். இன்னும் சொல்லப்போனால் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே சௌராஷ்டிரா அணியின் கேப்டனாக அபாரமாக செயல்பட்டுள்ளார். பேட்டிங்கிலும் அவ்வப்போது தன் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜாகீர் கானுக்கு பிறகு இந்திய அணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களின் தேடுதலில் இருக்கிறது. எனவே இத்தொடரில் இவருக்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்லாம்.

ஜலஜ் சக்சேனா

ரஞ்சித் தொடரில் சிறப்பாக பங்களித்தும் சக்சேனாவால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற முடியவில்லை. இவருக்கு பதிலாக ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் அணிக்குள் நுழைந்துள்ளார். இவர் பேட்டிங்கிலும் ஓரளவு ரன்கள் சேர்க்கக் கூடிய வீரர். அஸ்வின், ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் ஆடும் போட்டியில் இவரும் பங்கேற்றிருந்தால், இந்திய அணியில் ஆடிய அனுபவம் கிடைத்திருக்கும்.

- Advertisement -

ஷெல்டன் ஜாக்சன்

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் கே.எஸ்.பரத் மற்றும் சாஹா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்ட்டில் சாஹா களமிறங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பரத்தைப் போல ஜாக்சனும் பிரமாதமாக பேட்டிங் செய்யக் கூடிய திறன் கொண்டவர். ஆகையால் அதிர்ஷ்டமில்லா வீரர்கள் பட்டியலில் இவரின் பெயரையும் இணைத்துக் கொண்டோம்.