திறமை இருந்தும் அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்காத 5 இளம் வீரர்கள்

0
153
Rahul Tewetia and T Natarajan

கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்ற இந்திய அணி, கோவிட் தொற்றால் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாட முடியாமல் போனது.

தற்பொழுது இங்கிலாந்திற்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட செல்லும் இந்திய அணி, கடந்த ஆண்டு விளையாட முடியாது போன ஒரு டெஸ்ட் போட்டியில் ஜூலை 1 முதல் 5 வரை விளையாடுகிறது. இதற்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடுகிறது. இந்த தேதிகளில் இந்திய அணி அயர்லாந்து அணியோடு இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனால் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இதற்காக ஒரு தனி அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திறமை இருந்தும், திறமையை உள்நாட்டு தொடர்களில், ஐ.பி.எல் தொடரில் வெளிப்படுத்தியும், அயர்லாந்து தொடரில் வாய்ப்பு பெற முடியாது போன அதிர்ஷ்டம் அற்ற ஐந்து வீரர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -
மோசின் கான்:

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இந்த 23 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர், கடந்த ஐ.பி.எல் தொடரில் லக்னோ அணிக்கான தனது பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஒன்பது போட்டிளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் ஒரு ஓவருக்கு விட்டுத்தந்த ரன்கள் வெறும் 5.96ரன்தான். தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலேயே வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அயர்லாந்து டி20 தொடரிலும் வாய்ப்பு அமையவில்லை.

டி.நடராஜன்:

காயத்திலிருந்து மீண்டுவந்த யார்க்கர் நடராஜன், இந்த முறை ஸ்விங் செய்வதில் தேறி பவர்-ப்ளே பந்துவீச்சிலும் அசத்தி இருந்தார். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் போன்ற இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பெரியளவில் கவனம் ஈர்த்த காரணத்தால், திறமையிருந்தும் வாய்ப்பு அமையாமல் போயிருக்கிறது.

ராகுல் திவாட்டியா:

இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் சென்னை அணியோடு மோதி 9 கோடிக்கு இவரை குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இவரும் பேட்டிங்கில் பினிசிங் ரோலில் அசத்தி இருந்தார். இந்த முறை எப்படியும் தென் ஆப்பிரிக்கா இல்லை அயர்லாந்து டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார், ஆனால் ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் ஆகியோரது இருப்பு, இவரது வாய்ப்புக்குத் தடையாக அமைந்திருக்கிறது.

- Advertisement -
யாஷ் தயால்:

24 வயதான உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர், ஜாகீர்கானுக்குப் பிறகு சரியான இடக்கை பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு அமையாத குறையைத் தீர்ப்பவராகவே பார்க்கப்பட்டார். ஜூனியர் ஜாகீர்கான் என்று அழைக்கப்படும் இவரை குஜராத் டைட்டன்ஸ் அணி 3.2 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. மூத்த முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில், இவருக்கு வாய்ப்பு கொடுத்துப் பரிசோதித்திருக்கலாம்!

சர்ப்ராஸ் கான்:

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சமீபக்காலத்தில் கிரீடம் இல்லாத ராஜாவாக வலம் வருகிறார், மும்பை மாநில கிரிக்கெட் அணிக்காக விளையாடும் சர்ப்ராஸ்கான். ரஞ்சி தொடர்களில் சதம், இரட்டை சதம், முச்சதம் என சதங்களாகக் குவித்துக் தள்ளிக்கொண்டிருக்கிறார். அதேபோல் நவீன கிரிக்கெட் வடிவமான டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான அதிரடியான மாடர்ன் கிரிக்கெட் ஷாட்ஸ்களையும் வைத்திருக்கிறார். ஆனால் உடற்தகுதி ஒரு பிரச்சினையாக இருப்பதால், திறமையிருந்தும் வாய்ப்புகளை இழக்கிறார்!