ஸ்டீவ் ஸ்மித்தை ஐபிஎல் 2021 ஏலத்தில் வாங்க முயற்சிக்கும் 5 அணிகள்

0
6256
Steve Smith and MS Dhoni IPL
Photo: BCCI/IPL

2021 ஐ.பிஎலிற்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ளது.மினி ஏலம் என்பதால் ஐ.பி.எல் அணிகள் பெருவாரியான வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு ஒரு சில வீரர்களை மட்டுமே வெளியேற்றி உள்ளனர்.

சி.எஸ்.கே,மும்பை,டெல்லி போன்ற அணிகள் ரசிகர்கள் எதிர்பார்த்த வீரர்களை மட்டுமே வெளியேற்றி உள்ளனர்.

- Advertisement -

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தங்களின் கேப்டன் ஸ்டீவ்‌ ஸ்மித்தையே‌ அணியில் இருந்து நீக்கி உள்ளனர்.இது ஐ.பி.எல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை‌ ஏற்படுத்தியுள்ளது. பட்லர்,ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்,ஸ்மித் என நான்கு ஜாம்பவான் வீரர்களை வைத்திருந்தும் ராஜஸ்தான் அணி கடைசி இடத்தை தான் பிடித்தது.

ராஜஸ்தான் அணி 2018ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித்தை 12.5 கோடிக்கு வாங்கியது.அதிக தொகை அளித்தும் பலனின்றி போனது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்தை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.ஆனால் சர்வதேச அளவில் ஸ்டீவ் ஸ்மித் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பது அனைவர் அறிந்த உண்மை.

ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்மித் தற்போது நேரடி ஏலதிற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.அவரை ஏலத்தில் வாங்க எந்தெந்த அணிகள் போட்டிபோடும் என்பதைப் பற்றி காண்போம்.

- Advertisement -

5.டெல்லி கேபிடல்ஸ்:

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி அமர்க்களப்படுத்தியது.லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணியால் பிளேஆப் சுற்றில் ஜொலிக்க முடியவில்லை.அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததே அதற்கு முக்கிய காரணம் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

ஸ்டீவ் ஸ்மித் இளம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து செயல்பட்டால் டெல்லி அணிக்குப் பல நன்மைகள் கிட்டும்.மேலும்,ஒரு பேட்ஸ்மேனாக ஸ்மித் மிடில் ஆர்டருக்கு பலம் சேர்ப்பார்.அதனால் டெல்லி அணி இவரை வாங்க முன்வருவார்கள் என்று நம்பலாம்.

4.ராஜஸ்தான் ராயல்ஸ்:

ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் ஸ்மித்தை வெளியேற்றியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.2020 ஐ.பி.எலில் ராஜஸ்தான் அணிக்கு கடைசி இடம் மட்டுமே கிடைத்தது.ஸ்மித்தின் கேப்டன்சி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

அதனால் அடுத்து நடக்கவிருக்கும் ஐ‌.பி.எலில் ராஜஸ்தானை வழிநடத்த சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஏலத்தில் ஸ்மித்தை 12.5 கோடிக்கும் குறைவாக எடுத்தால் நிர்வாகத்திற்கு லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கூட ராஜஸ்தான் அணி அவரை விடுவித்து இருக்கலாம்.ஒருவேளை அப்படி இருந்தால் மீண்டும் ஸ்மித்தை அவர்கள் வாங்குவார்கள் என்றே எதிர்பார்க்கலாம்.

3.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணி சுமாரகாவே விளையாடியது.பெங்களூர் அணிக்கு எப்போதும் மிடில் ஆர்டரில் பிரச்சனை ஏற்படுகிறது.அறிமுக இளம் வீரர் படிக்கல் மிகச் சிறப்பாகவே பங்காற்றினார்.பின்ச்,மோரிஸ்,அலி என மற்ற எந்த வீரர்களும் எதிர்பார்த்த அளவு சிறப்பிக்கவில்லை.

மிடில் ஆர்டரை பலப்படுத்த ஆர்.சி.பி அணி ஸ்மித்தை ஏலத்தில் இருந்து எடுக்கலாம்.ஸ்மித்,கோஹ்லி, டிவில்லியர்ஸ் மூவரும் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைவர்.அதனால் பெங்களூர் நிர்வாகம் ஸ்மித்தை வாங்க முன்வர வேண்டும்.

2.சென்னை சூப்பர் கிங்ஸ்:

2020 ஐ.பி.எல் சீசன் சென்னை அணிக்கு மிகவும் மோசமாக அமைந்தது.இருப்பினும் கடைசி 3 போட்டிகளில் இளம் நட்சத்திரம் கெய்க்வாடின் சிறப்பான ஆடத்தால் ஆறுதல் வெற்றிகளுடன் சீசனை விட்டு வெளியேறியது.

சி.எஸ்.கேவின் நாயகன் ஷேன் வாட்சன் 2020 ஐ.பி.எலுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.இதனால் அடுத்து நடக்கவிருக்கும் ஐ.பி.எலில் வாட்சனிற்கு மாற்றாக எந்த வீரர் விளையாடுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.புனே அணியில் தோனியும் ஸ்மித்தும் ஏற்கனவே ஒன்றாக விளையாடி உள்ளனர்.அவர்கள் இருவரையும் ஒரே அணியில் மீண்டும் பார்த்திட வேண்டும் என்பதே அனைவரது ஆசை.தோனிக்கு பிறகு அணியை வழிநடத்த ஸ்டீவ் ஸ்மித் போன்ற அனுபவம் வாய்ந்த கேப்டன் தேவை.அதனால் ஸ்மித்தை ஏலத்தில் வாங்க சி.எஸ்‌.கே நிர்வாகம் பரிசீலிக்கும்.

1.கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

2020 ஐ.பி.எலின் முதல் பாதியில் சொதப்பினாலும் இரண்டாம் பாதியில் கெயிலின் வருகைக்குப் பிறகு பஞ்சாப் அணி ருத்ரதாண்டவம் ஆடியது.இருப்பினும்,அவர்களால் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற இயலவில்லை.முதல் 6 போட்டிகளில் சொற்ப ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்ததே அதற்குக் காரணம்.

டெல்லி அணியாயைப் போல இவர்களுக்கும் அனுபவம் வாய்ந்த வீரர் இல்லாததே பின்னடைவாக இருக்கிறது.சென்ற ஆண்டு 10 கோடிக்கு மேக்ஸ்வெல்லை வாங்கினர் ஆனால் அவரால் ஒரு நன்மையும் அணிக்கு கிடைக்கவில்லை.அந்த இடத்தை வேக்ஸ்வெல்லின் சக வீரர் ஸ்மித்தால் பூர்த்தி செய்ய முடியும்.அனைத்து அணிகளைக் காட்டிலும் பஞ்சாப் நிர்வாகம் அதிக பணம் வைத்திருக்கின்றனர்.ஏலத்தில் கடைசி வரை போராடி எப்படியாவது ஸ்மித்தை வாங்கிவிட்டால் அனுபவம் என்ற இடத்தைப் பஞ்சாப் அணி நிரப்பிவிடலாம்.