2022 ஐ.பி.எல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை வாங்கக் காத்திருக்கும் 5 அணிகள்

0
496
Suresh Raina

மிஸ்டர் ஐ.பி.எல் என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, சி.எஸ்.கே அணியின் முக்கிய அங்கமாக விளங்கியுள்ளார். முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், அவரைத் தக்க வைக்க தவறியுள்ளது. 2022 ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன் அந்தந்த அணிகள் குறிப்பிட்ட வீரர்களை வைத்துக் கொண்டு மற்ற அனைவரையும் விடுவித்தது. நடப்புச் சாம்பியனான சி.எஸ்.கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலியை தக்கவைத்துக் கொண்டது. ரெய்னா உட்பட ஒரு சில சீனியர் வீரர்களை மீண்டும் ஏலத்தில் வாங்கப்போவதாக சிஇஓ கூறியுள்ளார். சென்னை அணியைத் தவிரநிறப்Uவா மற்ற 5 அணிகள் சுரேஷ் ரெய்னாவை வாங்க வாய்ப்புள்ளது. அது எந்தெந்த அணிகள் என்பதைப் பற்றி பின்வருமாறு காண்போம்.

அகமதாபாத் அணி

புதிதாக இணைத்துள்ள இரு அணிகளில் அகமதாபாத்தும் ஒன்று. ரெய்னா, சென்னை அணியைத் தவிர 2016 & 2017ஆம் ஆண்டுகளில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடியுள்ளார். அகமதாபாத் அணி இவரை ஒரு வீரராக மட்டுமல்லாமல் கேப்டன் பொறுப்பிற்கு சேர்த்து தேர்ந்தெடுக்க உள்ளது. அணியை வழிநடத்தும் திறன் இவரிடம் நிறைந்து காணப்படுகிறது.

- Advertisement -

டெல்லி கேப்பிட்டல்ஸ்

நேர்காணல் ஒன்றில், “ சென்னை அணியைத் தவிர வேறு எந்த அணியில் நீங்கள் ஆட விரும்புகிறீர்கள் ? ” என்ற கேள்வி சுரேஷ் ரெய்னாவிடம் எழுப்பட்டது. அதற்கு அவர் சற்றும் தயங்காமல் “ டெல்லி அணி ” என்றார். அடுத்து வரும் ஐ.பி.எலுக்கு முன் டெல்லி அணி தங்களின் முக்கிய இந்திய வீரர்களான தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது. அவர்களின் இடத்தை சுரேஷ் ரெய்னாவால் நிரப்ப இயலும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சென்ற ஆண்டு ஐ.பி.எல் தொடர், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. ஏற்கனவே அதிரடி வீரர் வார்னரை தக்க வைக்காதது மிகப் பெரிய தவறென்று அனைவரும் கருதினர். மேலும் தற்போது அவர்கள் செய்துள்ள காரியத்தால் ஹைதராபாத் ரசிகர்கள் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த தசாப்பததின் சிறந்த டி20 வீரரான ரஷீத் கானை விடுவிதுள்ளனர். இளம் வீரர்கள் அடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அனுபவம் வாய்ந்த சுரேஷ் ரெய்னா இடம் பெற்றால் அணிக்கு கூடுதல் லாபம்.

பஞ்சாப் கிங்ஸ்

பிரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணி, அடுத்த ஆண்டு ஐ.பி.எலுக்கு மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷதீப் சிங்கை மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் நேரடியாக ஏலத்திற்கு வருவார் என்று செய்திகள் வெளியாகியேள்ளன. ஆகையால் இந்தியாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த வீரர் மற்றும் கேப்டன் பஞ்சாப் அணிக்குத் தேவை. அதைச் சிறப்பாக செய்ய சுரேஷ் ரெய்னாவால் முடியும். ஆதலால் இவரை வாங்க பஞ்சாப் நிர்வாகம் முன்வரும்.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

கேப்டனுக்கான தேடலில் இருக்கும் மற்றொரு அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். 2021 ஐ.பி.எலுடன் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி இறங்கினார். சுரேஷ் ரெய்னாவின் தலைமையின் கீழ் தான் விராட் கோஹ்லி தன் முதல் போட்டியில் களமிறங்கினார். இருவரும் இணைத்து பல வருடங்கள் ஆடியுள்ளனர். அவர்களுக்கிடையே நல்ல புரிதலும் உண்டு. அதனால் நிச்சயம் ஆர்..சி.பி நிர்வாகம், இடதுகை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவை வாங்க முயற்சிப்பர்.