ஐபிஎல் 2024-ல் மிட்செல் ஸ்டார்க்கை வாங்க வாய்ப்புள்ள 5 அணிகள்.. கம்பேக் கொடுக்கும் ஆஸ்திரேலியா வீரர்.!

0
666

உலகின் தலைசிறந்த பத்திவீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் மிட்செல் ஸ்டார்க். டெஸ்ட் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 எனஅனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா அணியின் தாக்குதல் ஆயுதமாக செயல்பட்டு வருபவர் இவர். தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெறவில்லை என்றாலும் உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருக்கும் இவர் ஆட்டத்தின் போக்கையே தனி ஆளாக மாற்றக்கூடிய திறமை வாய்ந்த வீரர்.

ஐபிஎல் தொடர்களில் 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் தொடர்ச்சியாக பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலியா அணிக்கு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதையே முக்கிய நட்சத்திரமாகக் கொண்டிருக்கும் இந்த வேகப்பந்து வீச்சு புயல் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகள் பங்கேற்று விளையாடுவது 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு சிறந்த பயிற்சியாக அமையும் என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் மிட்சல் ஸ்டார்க் கலந்து கொண்டு விளையாடினால் அவரை ஏலத்தில் வாங்க வாய்ப்பிருக்கும் ஐந்து ஐபிஎல் அணிகளை பற்றி இந்த தொடரில் பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் பலவீனமாகவே இருக்கிறது. அவர்களின் முக்கிய பந்துவீச்சாளரான தீபக் சகார் அடிக்கடி காயம் அடைந்து விடுகிறார் ர். மேலும் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களாக தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த மகாலா மட்டுமே இருக்கிறார். எனவே நடைபெற இருக்கின்ற மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் மிச்சல் ஸ்டார்க்கை சி எஸ் கே அணி எடுத்தால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று எஸ்ஆர்எச். இளம் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆப் சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான்கு வெற்றிகள் உடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பெற்றது. அந்த அணியில் புவனேஸ்வர் குமாரை தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் சிறப்பாக செயல்படவில்லை. அந்த அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் ஆன உம்ரான் மாலிக் நடந்து முடிந்த ஐபிஎல்லில் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹைதராபாத் அணி மிச்சல் ஸ்டாக்கை வருகின்ற ஐபிஎல் போட்டிகளுக்காக ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அவரது அனுபவம் மற்றும் வேகம் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் :
2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டார்ககை எழுத்தில் எடுப்பதற்காக போட்டி போடும் அணிகளில் டெல்லி கேப்பிட்டல் அணியும் முதல் வரிசையில் இருக்கிறது. அந்த அணியில் தென்னாப்பிரிக்காவின் அன்றிச் நோர்க்கியா மற்றும் லுங்கி இங்கிடி போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் நோர்க்கியா தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் சிறப்பான பங்களிப்பை வழங்கவில்லை எனவே அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான எவத்தில் நிச்சயமாக மிட்சல் ஸ்டார்க்கை குறி வைக்கும் அணிகளில் டெல்லி கேப்பிட்டல் அணி முதன்மையாக இருக்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :
நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் பிளே ஆப் சுற்றில் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடைபெற இருக்கின்ற ஏலத்தில் மிச்சல் ஸ்டார்க்கை வாங்குவதற்கு கடுமையாக போட்டி போடும். அவர் 2014 மற்றும் 15 ஆம் ஆண்டுகளில் ஆர் சி பி அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருட ஐபிஎல் தொடரில் முகமது சிராஜ் தவிர ஆர் சி பி அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை. மேலும் சில முக்கிய பந்துவீச்சாளர்களும் போட்டி தொடரின் போது காயம் ஏற்பட்டது. இதனால் சிராஜ் மற்றும் ஸ்டார்க் கூட்டணி அமைத்து எதிரணிகளை மிரட்டுவதற்கு நிச்சயமாக ஆர்சிபி பிளான் போடும். இதனால் ஸ்டாக்கை வாங்க ஏலத்தில் கடுமையாக போராடும் ஆர்சிபி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக விளங்கி வருவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு முறை சாம்பியன் ஆன கேகேஆர் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அந்த அணியில் லோகி பெர்குசன் போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் கடந்த சீசனில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை . இதனால் மிச்சல் ஸ்டார்க் போன்ற ஒரு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் கொல்கத்தா அணியில் இருந்தால் அது கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் .ஸ்டார்க் அனுபவம் மற்றும் வேகத்தின் மூலம் போட்டியையே தனி ஆளாக மாற்றக் கூடியவர். எனவே நிச்சயமாக அவரை ஏலத்தில் எடுக்க கேகேஆர் முயற்சி மேற்கொள்ளும்