கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆவது மிகவும் கொடுமையான ஒன்று. சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் ஒரு வீரர் தீடீரென்று எதிர்பாராத விதமாக தன் விக்கெட்டை பரிகொடுப்பதனால், ஆட்டத்தின் போக்கே கூட மாற வாய்ப்பு உள்ளது. டெத் ஓவர்களில் விரைவாக ரன்கள் சேர்க்கும் நோக்கத்தில் அதிகமான ரன் அவுட்கள் ஏற்படும். இல்லையேல் இரு பேட்ஸ்மேன்களுக்கு இடையேயான தவறான புரிதல் காரணமாகவும் நிகழ வாய்ப்புள்ளது. ஒரு சில முறை யாரும் எதிராபார்காத வகையில் சிறப்பான ஃபீல்டிங்கால் ரன் அவுட் விக்கெட் விழும். பல ஜாம்பவான்களின் கிரிக்கெட் வாழ்காகை ரன் அவுட் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு பார்ப்போம்.
எட் ஜாய்ஸ்
முன்னாள் இங்கிலாந்து மட்டும் அயர்லாந்து வீரரான ஜாய்ஸ், தன்னுடைய கடைசி சர்வதேசப் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக 2018ல் ஆடினார். அயர்லாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அது அமைந்தது. அதில் அவர், முதல் இன்னிங்சில் 4 ரன்னும் இரண்டாவது இன்னிங்சில் 43 ரன்களும் சேர்த்திருந்தார். அஷ்ரஃப்பின் அற்புதமான ஃபீல்டிங்கால் அவரது சர்வதேச கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்தது.
எம்.எஸ்.தோனி
இந்திய அணியின் முன்னாள் மற்றும் தலைசிறந்த கேப்டன், எம்.எஸ்.தோனி. 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியின் போது, அனைத்து இந்தியர்களின் நம்பிக்கையும் தோனியின் மேல் மட்டுமே இருந்தது. ஆனால் கப்டிலின் துல்லியமான த்ரோவால், தோனி பெவிலியன் திரும்பினார். இந்த ரன் அவுட், ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
பிரைன் லாரா
இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு லெஜன்ட், பிரைன் லாரா. இந்த வெஸ்ட் இண்டீஸ் இடதுகை பேட்ஸ்மேனும் தன் கடைசி சர்வதேசப் போட்டியை உலகக்கோப்பைத் தொடரில் தான் விளையாடினார். 18 ரன்கள் எடுத்திருந்த பொழுது இங்கிலாந்து வீரர், கெவின் பீட்டர்சனால் ரன் அவுட் செய்யப்பட்டார். 2007 உலக்ககோப்பையில் சூப்பர் 8 சுத்றுடன் மேற்கிந்திய தீவுகள் வெளியேறியது.
முஹம்மது கெய்ப்
இந்திய முன்னாள் கிரிக்கெட்டர் முஹம்மது கெய்ப், 2006ஆம் ஆண்டு வெளிநாட்டு மைதானத்தில் தன்னுடைய கடைசி போட்டியை எதிர்கொண்டார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அந்த ரன் அவுட்டை நிகழ்த்தியவர்கள், போஸ்மன் மற்றும் ஷான் பொல்லாக் ஆவர்.
ஜாவேத் மியான்டாட்
பாகிஸ்தான் போற்றும் தலைசிறந்த வீரர்களில் இவரும் ஒருவர். 1996 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக 64 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆனார் ஜாவேத் மியான்டாட். அப்போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. துரதிர்ஷ்டவசமாக மியான்டாடின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி தோல்வியில் முடிந்தது.