ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறாத 5 வீரர்கள்

0
2843
Yuzvendra Chahal and Shreyas Iyer

அக்டோபர் 17ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த பல முன்னணி வீரர்கள் இந்த தொடரில் விளையாட ஆவலோடு காத்திருக்கிறார்கள். உலக கோப்பை வென்ற சுமார் 14 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த முறை நிச்சயம் வென்று விட வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது.

ஆனால் உலக கோப்பை தொடரில் நிச்சயம் இடம் பெறுவார் என்று நினைத்த பலர் இந்த அணியில் இடம்பெறவில்லை. இந்த வீரர்கள் வெளிநடப்பு எந்த அளவு அணியை பாதிக்கும் என்பது தொடர் அரங்கேறும் போது தான் தெரியும் அப்படி நிச்சயம் இடம் பெறுவார் என்று நினைத்து மிஸ் செய்த 5 வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

- Advertisement -

1.யுஸ்வேந்திர சஹால்

கடந்த ஜூலை மாதம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சஹால் சிறப்பாக பந்து வீசினார். இதனால் டி20 அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என்று பலரது பார்த்தபோது ஆச்சரியம் அளிக்கும் விதமாக சஹால் அணியில் இல்லை. அவருக்கு பதிலாக சீனியர் ஸ்பின்னராக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் லெக் ஸ்பின்னராக ராகுல் சகார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.ஷிகர் தவான்

தவானும் கடந்த ஜூலை மாதம் நடந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் நன்றாகவே செயல்பட்டார். ரோகித்துடன் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் அவரது பெயர் இடம்பெறாமல் இருப்பது ஆச்சரியம்தான். இவருக்கு பதிலாக துவக்க வீரராக ராகுல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3.நடராஜன்

கடந்த வருடம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் டி20 டெஸ்ட் என்று அனைத்து விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டவர் தமிழக வீரர் நடராஜன். யார்க்கர் பேசுவதில் வல்லவரான இவர் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் காயம் காரணமாக இவரது பெயர் இடம் பெறவில்லை.

- Advertisement -

4.ஸ்ரேயாஸ் ஐயர்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நான்காம் நிலை வீரர் இவர்தான் என்று பேச்சு எழுந்து வந்த நிலையில் இந்த முறை ஸ்ரேயாஸ் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. 15 பேர் கொண்ட மெயின் அணியில் இடம்பெறாமல் யாருக்காவது காயம் ஏற்படும் பட்சத்தில் அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற இடத்திலேயே ஸ்ரேயாஸ் இடம்பெற்றுள்ளார். இதற்கு முக்கியக் காரணம் அவருக்கு ஏற்பட்ட காயம் ஆகும்.

5.தீபக் சஹர்

இந்திய அணியின் முக்கிய ஸ்விங் பந்துவீச்சாளர் தீபக் சஹர். பவர் பிளே அவர்களின் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளுவதில் வல்லவர் இவர். தற்போது கடைசி ஓவர்களிலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இருந்தாலும் இவர் டி20 மெயின் அணியில் இடம்பெறாதது வருத்தம்தான்.