ஐசிசி 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பைத் தொடர் இரண்டிலும் சதமடித்த 5 வீரர்கள்

0
259
Brendon McCullum and Suresh Raina

ஐசிசி நடத்தும் சர்வதேச 50 ஓவர் மற்றும் 20 ஓவர் தொடர்களில் ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. குறைந்த போட்டிகளைக் கொண்ட இந்த தொடர்களில், பேட்ஸ்மேன் ஒவ்வொரு போட்டியிலும் நிதானமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டி வரும். முதல் பந்தில் இருந்து தொடர்ச்சியாகவும், நிதானமாகவும் விளையாடினால் மட்டுமே ஒரு வீரரால் சதம் அடிக்க முடியும்.

அதிலும் குறிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை தொடர் என இரண்டிலும் சதம் அடிப்பது மிகவும் கடினமான விஷயமாகும். ஆனால் ஐசிசி நடத்தும் சர்வதேச 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை தொடர்களில் ஐந்து கிரிக்கெட் வீரர்கள் சதம் அடித்து அசத்தியுள்ளார்கள். அந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் யார் என்று தற்போது பார்ப்போம்.

- Advertisement -

கிறிஸ் கெய்ல்

யுனிவர்சல் பாஸ் என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் இவர் மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரையில், அங்கு அதிரடியாக விளையாட கூடிய ஒரு சில வீரர்களில் ஒருவர். கிறிஸ் கெய்ல் 2003ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கென்யா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், தன்னுடைய முதல் உலகக் கோப்பை முதல் பதிவு செய்தார். அந்த போட்டியில் 151 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 119 ரன்கள் எடுத்தார்.

அந்த ஒரு சதம் மட்டுமின்றி 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரிலும் இரட்டை சதம் குவித்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 147 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்கள் என 215 ரன்கள் குவித்தார். 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் முதல் இரட்டை சதம் அடுத்த பெருமையும் இவருக்கு உண்டு.

50 ஓவர் உலகக் கோப்பை தொடரை போலவே 20 ஓவர் உலக கோப்பை தொடரிலும் இவர் சதங்களை குவித்து அசத்தியிருக்கிறார். 2007ஆம் ஆண்டு நடந்த முதல் உலக கோப்பை தொடரில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் என 117 ரன்கள் குவித்தார். டி20 உலக கோப்பை தொடரில் முதல் சதம் அடித்த வீரரும் இவர்தான்.அந்த பெருமையும் கிறிஸ் கெய்லுக்கு உண்டு.

- Advertisement -

2007ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்கள் என 100 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சுரேஷ் ரெய்னா

இந்த பட்டியலில் அடுத்து உள்ள வீரர் நமது இந்தியாவை சேர்ந்த சுரேஷ் ரெய்னா. 2015 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 104 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என 110 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

50 ஓவர் உலகக் கோப்பை தொடரை போலவே 20 ஓவர் உலக கோப்பை தொடரிலும் சுரேஷ் ரெய்னா சதம் அடித்திருக்கிறார். 2010ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 101 ரன்கள் குவித்தார். டி20 உலக கோப்பை தொடர் வரலாற்றில் முதல் சதம்மடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் சுரேஷ் ரெய்னாவையே சேருமென்பது குறிப்பிடத்தக்கது.

மஹேல ஜெயவர்தன

இலங்கை அணியை சேர்ந்த மஹேல ஜெயவர்தன 2007ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 109 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என 115 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கனடா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 87 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சித்தர் என 100 ரன்கள் குவித்தார். அதே தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 108 பந்துகளில் 13 பவுண்டரிகள் அடித்து 103 ரன்கள் குவத்து அசத்தினார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

50 ஓவர் உலகக் கோப்பை தொடரை போல 2010ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் மஹேல ஜெயவர்தன சதம் அடித்தார். அந்த தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 64 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என 100 ரன்கள் குவித்தார்.

பிரண்டன் மெக்கல்லம்

நியூசிலாந்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான பென்டன் மக்களிடம் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் கனடா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 109 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 107 ரன்கள் குவித்தார்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் நீல சித்தர்கள் என 123 ரன்கள் குவித்து பிரண்டன் மெக்கல்லும் ருத்ரதாண்டவம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 2019ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 76 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 103 ரன்கள் குவித்தார். அதனைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரிலும் தன்னுடைய சதத்தை நேற்று ஜோஸ் பட்லர் பதிவு செய்தார்.

2021 ஆம் ஆண்டிற்கான நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 67 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் என 101 ரன்கள் குவித்து இறுதி வரை பட்லர் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடைய சதம் காரணமாகவே நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.