கடைசி போட்டியில் அதிக ரன்கள் குவித்த 5 இந்திய வீரர்கள்

0
3025

ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் கடைசி போட்டி என்பது மிக மிக கவனம் பெறும். அதிலும் தான் நேசித்த விளையாட்டை கடைசியாக ஒருமுறை இந்த வீரர் எப்படி ஆடப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்து கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றியுடன் முடித்தது ஒரு சிலரே. அப்படி தங்களது கடைசி ஆட்டத்தை மிகவும் சிறப்பாக ஆடிய 5 முக்கிய இந்திய வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

அஜய் ஜடேஜா – 93 (103)

இந்திய அணிக்கு கிடைத்த மிகவும் அருமையான பேட்டிங் வீரர்களில் ஒருவர் அஜய் ஜடேஜா. பலமுறை அவரது அற்புத பேட்டிங் திறமையால் இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டுள்ளார். மிகவும் சிறப்பான வீரராக பல ஆண்டுகாலம் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இவரது கேரியர் நின்று போனது. ஐந்து ஆண்டுகள் இவருக்கு தடை விதிக்கப்பட்டது. தான் விளையாடிய கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 93 ரன்களை குவித்து அசத்தினார். இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியுற்றாலும் அஜய் ஜடேஜா வின் ஆட்டம் மிக மிக மோசமான தோல்வியைத் தவிர்த்தது.

- Advertisement -

ககன் கோடா – 89(129)

இந்திய அணிக்கு மற்றொரு சிறந்த துவக்க வீரராக வந்திருக்க வேண்டியவர் ககன் கோடா. தான் விளையாடிய முதல் ரஞ்சி போட்டியிலேயே சதம் கடந்து அசத்தியவர். ஆனால் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படாததால் வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்கு விளையாடியுள்ளார். இருந்தாலும் தன் விளையாடிய கடைசி போட்டியில் கென்யா அணிக்கு எதிராக எண்பத்தி ஒன்பது ரன்கள் குவித்து அசத்தினார்.

சையத் அபித் அலி – 70(98)

இந்திய அணி கண்டெடுத்த மிக மிக சிறப்பான ஆல் ரவுண்டர்களில் ஒருவர் சையத் அபித் அலி. மிகச் சிறப்பான பந்துவீச்சாளர், அருமையான லோயர் ஆர்டர் பேட்டிங் வீரர் என்பதை கடந்து இவர் மிகச்சிறந்த ஃபீல்டிங் வீரரும் கூட. அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். கடைசியாக இவர் 1975 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடினார். அந்த ஆட்டத்தில் 98 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தோடு இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தார்.

ராகுல் டிராவிட் – 69(79)

இந்திய அணியின் தடுப்புச் சுவர் என வர்ணிக்கப்படும் டிராவிட், இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். இந்திய அணி சரிவில் இருக்கும் போதெல்லாம் தனது பேட்டிங் திறமையால் அணியை மீட்டு நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார். இவ்வளவு சிறப்பான வீரரான டிராவிட் தனது கடைசி ஒரு நாள் ஆட்டத்தை 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார். அந்தப் போட்டியில் 79 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார் டிராவிட்.

- Advertisement -

சுரீந்தர் அமர்நாத் – 62(75)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லாலா அமர்நாத்தின் மகன் சுரீந்தர் அமர்நாத். தனது பதினைந்தாம் வயதிலேயே இரஞ்சி போட்டிகளுக்கு அறிமுகமானவர் இவர். அதுவும் போதாமல் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் கடந்தவர். இதுவரை 10 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். கனடிய கடைசி ஒருநாள் போட்டியில் இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 75 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அசத்தினார்.