புனே அணிக்காக மட்டுமே ஐபிஎல் விளையாடிய 5 முக்கியமான வீரர்கள்

0
2196
Nathan McCullum and Michael Clarke

சென்னை மும்பை போன்ற மிகப்பெரிய அணிகள் ஆதிக்கம் செலுத்தும் ஐபிஎல் தொடரில் மூன்றே மூன்று தொடர்கள் மட்டுமே விளையாடி அணி புனே வாரியர்ஸ் அணி. தங்களின் ஆதிக்கத்தை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்த முடியா விட்டாலும் பல முக்கியமான வீரர்களை தங்கள் அணியில் ஆட வைத்து அழகு பார்த்த அணி இது. விளையாடி மூன்று தொடர்களில் இதுவே முதல் நான்கு இடத்தை இந்த அணியால் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் பல நட்சத்திர வீரர்களை தனது அணியில் ஆட வைத்தது புனே வாரியர்ஸ். அப்படி புனை அணிக்காக மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடி வேறு எந்த அணிக்கும் விளையாடாத ஐந்து முக்கியமான வீரர்களை இங்கு பார்ப்போம்.

மைக்கேல் கிளார்க்

ரிக்கி பாண்டிங் என்றாலுமே ஆஸ்திரேலிய அணியை விட்டு அகன்ற பின்பு ஆஸ்திரேலிய அணியை தனது தோளில் சுமந்தவர் மைக்கேல் கிளார்க். 2015ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் இவர்தான் .அடிக்கடி காயம் ஏற்படும் வீரரான இவருக்கு ஒரு ஆண்டு புனே அணி தனது அணியில் ஆட வாய்ப்பு கொடுத்தது. 6 ஆட்டங்களில் 98 ரன்களை புனே அணிக்காக அவர் எடுத்தார். மேலும் தனது இடது கை சுழற்பந்து வீச்சின் மூலம் 2 விக்கெட்டுகளையும் பெற்றுத் தந்தார் இவர்.

- Advertisement -

கேலம் பெர்குசன்

இந்த வரிசையில் இருக்கும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் பெர்குசன். ஆஸ்திரேலிய அணியின் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய வீரர் இவர். இருந்தாலும் 2011ஆம் ஆண்டு வரை இவளை எந்த அணியும் ஐபிஎல் தொடருக்கு ஆட அழைக்கவில்லை. 2011ஆம் ஆண்டு புனே அணி இவரை ஒப்பந்தம் செய்ததுமில்லாமல் அடுத்த ஆண்டுக்கும் தக்க வைத்துக் கொண்டது. புனே அணிக்காக 8 ஆட்டங்களில் விளையாடி 98 ரன்கள் எடுத்தார் பெர்குசன்.

நாதன் மெக்கல்லம்

நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பிரென்டன் மெக்கல்லத்தின் சகோதரர் நாதன் மெக்கல்லம். ஆனால் தனது சகோதரர் பிரண்டன் மெக்கல்லமை போல நாதன் மெக்கல்லத்தால் ஐபிஎல் தொடரில் ஜொலிக்க முடியவில்லை. இரண்டு போட்டிகள் மட்டும் துணி அடுத்ததாக விளையாடி அதில் 26 ரன்கள் எடுத்தார்.

அல்போன்சோ தாமஸ்

தென்ஆப்பிரிக்க அணியின் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர் அல்போன்சா தாமஸ். டி20 கிரிக்கெட்டில் இதுவரை 263 விக்கெட்டுகளை குவித்தவர் இவர். புனே அணிக்காக 2 ஐபிஎல் தொடர்களில் 15 ஆட்டங்களில் விளையாடி இவர் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

டிம் பெய்ன்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் டிம் பெய்ன் ஒரு காலத்தில் புனே அணிக்காக விளையாடி உள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல பல வெற்றிகளை இவரால் ஐபிஎல் அணிக்கு பெற்றுத்தர முடியவில்லை. இரண்டு ஆட்டங்களில் உணவிற்காக விளையாடி 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் இவர். அதன் பிறகு இவருக்கு ஐபிஎல் விளையாட வாய்ப்பு கிடைக்கவே இல்லை.