கடைசி ஐபிஎல்.. 2024 உடன் ஓய்வு பெற வாய்ப்புள்ள 5 நட்சத்திர வீரர்கள்

0
9654

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 தொடர்களில் முதன்மையானது. 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் டிசம்பர் மாதம் துபாயில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களது தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிடுவதற்கு இன்று கடைசி நாள். இதற்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் 10 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்றைய தினம் எந்த வீரர்கள் தக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் மற்றும் எந்த வீரர்கள் அணியால் கழட்டி விடப்பட்டு இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியவரும்.

அதற்கு முன்பாக 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரோடு எந்த வீரர்கள் ஓய்வு பெற வாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்போம். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல வீரர்கள் நீண்ட காலமாக விளையாடி வருகின்றனர். அவர்களில் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டுப்ளசிஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்க வீரர்கள் . இவர்கள் தவிர இந்திய வீரர்கள் பலரும் தங்களது ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த வருட ஐபிஎல் தொடர் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து வீரர்களுக்கு கடைசி சீசனாக இருக்கலாம்.

- Advertisement -

பாப் டு பிளெஸ்ஸிஸ்:
தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ். தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் கடந்த இரண்டு சீசன்களில் அந்த அணியின் கேப்டனாகவும் பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஆர்சிபி கடந்த சீசனின் இறுதி கட்டத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. கடந்த சில வருடங்களாக தென்னாப்பிரிக்கையா அணிக்கு தேர்வு செய்யப்படாமல் இருக்கும் இவர் உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் ஓய்வு பெறும் வயதையும் நெருங்கி விட்டதால் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இவரது கடைசி சீசனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஷிகர் தவான்:
இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான ஷிகர் தவான் கடந்த இரண்டு சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இவரும் கடந்த ஓராண்டாகவே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது இவருக்கும் 38 வயதாகி இருப்பதால் வர இருக்கின்ற 2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரோடு இவரும் ஓய்வை அறிவிக்கலாம்.

வ்ரிதிமன் சாகா:
வ்ரிதிமன் சாகா கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்பு சிஎஸ்கே மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கும் விளையாடி இருக்கிறார் இவர். 2008 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குஜராத் அணிக்கு சிறப்பான துவக்க வீரராகவும் செயல்பட்டு வருகிறார். வயது காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறலாம். இல்லையென்றால் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் வயது காரணமாக இவரை யாரும் வாங்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தினேஷ் கார்த்திக்:
2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் ஹீரோவாக விளங்கியவர். அந்த ஐபிஎல் தொடரில் ஃபினிஷிங் ரோல் சிறப்பாக செய்ததால் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 அணியிலும் இடம் பெற்றார். எனினும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இந்த வருட ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் 38 வயதை நெருங்கும் இவர் இந்த வருடம் ஆர்சிபி அணி இவரை ரிலீஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆர் சி பி அணிக்காக இந்த வருடம் விளையாடினாலும் இந்த ஐபிஎல் தொடர் இவருக்கு கடைசி சீசன் ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

மகேந்திர சிங் தோனி:
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக மதிப்புமிக்க வீரர் என்றால் அதை எம்எஸ் தோனி. 2008 ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக வழி நடத்தி வரும் கேப்டன் கூல் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார். மேலும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டிகளையும் வென்ற கேப்டன் இவர் தான். கடந்த வருட ஐபிஎல் தொடர் இவரது இறுதி தொடராக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் ரசிகர்களின் அன்புக்காக மீண்டும் ஒருமுறை 2024 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரிலும் விளையாட இருக்கிறார். வருகின்ற ஐபிஎல் தொடரோடு சிஎஸ்கே வின் ராஜா விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.