கடந்த பத்தாண்டுகளில் இந்திய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினர். உலகின் சிறந்த டி20 தொடராக ஐ.பி.எல் விளங்குகிறது. இந்தியன் பிரீமியர் லீக் மூலம் புது புது திறமைசாலிகள் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமாகிறார்கள். ஆகையால், தேசிய அணிக்குள் நுழைவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. தற்போதுள்ள இந்திய அணியில் எந்த ஒரு வீரரின் இடமும் நிச்சயம் இல்லை.
நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத வீரர், அணியில் இருந்து நீக்கப்படுவார். கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், இரண்டு தசாப்த்ததிற்கு மேல் விளையாடி உள்ளார். அவர் தன்னுடைய 40வது வயதில் தான் ஓய்வு பெற்றார். ஆனால் அனைத்து வீரர்களும் அவரைப் போல் நீண்ட காலம் ஆடுவதில்லை. ஒரு சில வீரர்கள் நினைதை விட விரைவாக ஓய்வு பெற்றுள்ளனர். அவ்வீர்ரகளைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
1.உன்முக்த் சந்த்
2012 யு-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன், உன்முக்த் சந்த். ஐ.பி.எலில் ராஜஸ்தான், டெல்லி மற்றும் மும்பையில் அவர் ஆடியுள்ளார். ஆனால் அவரால் சர்வதேச அளவில் உயர முடியவில்லை. அவர் தன்னுடைய முழு திறனையும் உணரவில்லை. வெறும் 28 வயதேயான உன்முக்த் சந்த், சமீபத்தில் தான் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். தற்போது அவர் அமெரிக்க கிரிக்கெட் லீக்கில் கலந்து கொண்டு ஆடிவருவதாக செய்திகள் வெளிவந்தன.
2.இர்பான் பதான்
இர்பான் பதான், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர். மேலும், இந்திய அணியின் தலைசிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல் இரண்டிலும் இவருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. இர்பான் பதான், சென்ற ஆண்டு தன்னுடைய 35 வயதில் ஓய்வை அறிவித்தார். ஓய்வுக்கு பிறகு அவர் வர்ணையாளராக செயல்பட்டு வருகிறார். அது தவிர்த்து ரோடு சேப்டி தொடர் மற்றும் இலங்கை டி20 தொடரிலும் பங்கேற்றார்.
3.சுரேஷ் ரெய்னா
மூன்று வித ஃபார்மட்டிலும் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார். 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இவரும் ஒருவர். இந்திய அணியை ஒரு சில போட்டிகளில் வழிநடத்தியும் உள்ளார். மிஸ்டர் ஐ.பி.எல் என்றழைக்கபடும் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ்காக பல சாதனைகள் படைத்துள்ளார்.
2016 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு அவர் எந்த பெரிய தொடரிலும் கலந்து கொள்ளவில்லை. நடுவில் ஒரு முறை இந்திய அணிக்கு திரும்பி வந்தார். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஆகஸ்ட் 15, 2020 அன்று எம்.எஸ்.தோனியுடன் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெற்றார். அவர் 33 வயதில் ஓய்வை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்தியது.
4.சுதீப் தியாகி
இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர், சுதீப் தியாகி. இவர் ஐ.பி.எலில் சென்னை அணிக்காக ஆடினார். அதன் பிறகு, சர்வதேச அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. சர்வதேச அளவில் இவர் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே ஆடினார். துரதிஸ்டவசமாக அவரின் கிரிக்கெட் வாழ்கை விரைவில் முடிந்து விட்டது. நவம்பர் 2020ல் சுதீப் தியாகி தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே.
5.பிரக்யான் ஓஜா
இந்திய அணியின் இடதுகை ஸ்பின்னரான பிரக்யான் ஓஜா, தற்போது கிரிக்கெட் நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் இந்திய அணியின் சிறந்த இடதுகை ஸ்பின்னராக கருதப்பட்டார். ஆனால் ஓஜாவின் பவுலிங் ஆக்சன் அவருடைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தன்னுடைய 33 வயதில், அதாவது 2020 பிப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இறுதி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் சமீபத்தில், ரோட் சேப்டி தொடரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.