ஒருநாள் போட்டியில் 100+ ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் 5 இந்திய வீரர்கள்

0
347
Kedar Jadhav and Virender Sehwag

கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளுக்கு தனிப்பெருமை உண்டு. உண்மையில் சொல்லப்போனால் டி20 உலகக்கோப்பையை விட 50 ஓவர் உலகக்கோப்பை தான் பெரியதாக கருதப்படுகிறது. முன்னர், ஒருநாள் போட்டிகளில் இருதரப்பினரும் தலா 60 ஓவர்கள் ஆடினார். காலப்போக்கில் அது 50 ஓவராக குறைதுக் கொள்ளப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு அணி 300 பந்துகளில் 250 முதல் 300 ரன்கள் சேர்த்தாலே வெற்றிக்கனியை எட்டிவிடலாம் என்று இருந்தது.

ஆனால் இன்றோ குறைந்தபட்ச இலக்கே 350 ரன்களாக உயர்ந்து உள்ளது. ஆகையால் 75 – 80 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய பேட்ஸ்மேன்கள், தற்போது 90+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் 100+ ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் 5 இந்திய வீரர்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயர்

நடப்பு இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் போட்டிகளில் 100.37 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இந்திய அணிக்காக அவர் 20 இன்னிங்சில் 803 ரன்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 103 ஆகும். இனி வரும் காலங்களிலும் ஐயர் இதே ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவது மிகவும் அவசியம்.

கேதார் ஜாதவ்

ஐயரைப் போல ஜாதவும் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஆடிய வீரர் தான். இந்த வலதுகை பேட்ஸ்மேன் 2019 உலகக் கோப்பையிலும் ஆடினார். ஓடிஐயில் 101.6 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,389 ரன்கள் விளாசியுள்ளார். தற்போது அவர் இந்திய அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விரேந்தர் சேவாக்

இப்பட்டியலில், 2000துக்கு முன்னர் அறிமுகமான ஒரே வீரர், சேவாக். முன்னாள் அதிரடி ஒப்பனரான விரேந்தர் சேவாக் தன்னுடைய ஒருநாள் கேரியரில் 7,995 ரன்கள் குவித்துள்ளார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 104.44 ஆகும். அவர் ஆடிய காலக் கட்டத்தில் இதுவே அபாரமான ஒன்றாக கருதப்பட்டது. மேலும், இப்பட்டியலில் இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரரும் இவரே.

- Advertisement -

யூசுப் பதான்

இந்திய வீரர்களில் இரண்டே பேர் தான் 110க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளனர். ஒருவர் ஓய்வு பெற்ற அதிரடி ஆல்ரவுண்டர், யூசுப் பதான். 50 ஓவர் ஃபார்மட்டில் 810 ரன்கள் அடித்துள்ளார். அதில் 3 அரை சதமும் 2 சதமும் அடங்கும். பதானின் ஸ்ட்ரைக் 113.6 ஆகும்.

ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் வீரர்களில், தன் பெயருக்கு பின்னால் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர் ஹர்திக் பாண்டியா. ஓடிஐயில் இவர் 1,286 ரன்கள் அடித்துள்ளார். ஆச்சரியமான விசியம் என்னவென்றால் இப்பட்டியலில் இருக்கும் வீரர்கள் சதம் அடிக்காதவர் இவர் மட்டுமே. நடப்பு இந்திய அணியின் ஃபினிஷராக பாண்டியா திகழ்கிறார். இவரும் ஜடேஜாவும் சேர்ந்து போட்டிகளை ஃபினிஷ் செய்தால் நிச்சயம் இந்திய அணி இமாலய இலக்கை அடையும். 2020ல் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இதை அவர்கள் செய்து காண்பித்துவிடடனர்.