இங்கிலாந்து தொடருக்கு பின் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பு குறைந்துள்ள 5 இந்திய வீரர்கள்

0
715
Ruturaj Gaikwad and Shreyas Iyer

கடந்த ஆண்டு யு.ஏ.இ-யில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றோடு இந்திய அணி தோற்று வெளியேறி இருந்ததால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு அணியை அமைப்பதில் அதிக கவனத்தோடு செயல்பட்டு வருகிறது. இதனால் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் வருகின்ற டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவாகியுள்ள ஐந்து வீரர்களைப் பற்றியும், அதற்கான காரணங்களையும்தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.

ருதுராஜ் கெய்க்வாட்

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும், விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்ட்ரா அணிக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டாதால் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். இந்த வருட ஐ.பி.எல் தொடர் முடிந்து தென்ஆப்பிரிக்க அணியோடு ஐந்து டி20 போட்டிகளில் இவரது செயல்பாடு பெரியளவில் சிறப்பாக அமையவில்லை. அதே சமயத்தில் விக்கெட் கீப்பிங் இடக்கை பேட்ஸ்மேன்ஸ் இசான் கிஷனின் செயல்பாடு சிறப்பாக இருப்பதால், மூன்றாவது துவக்க வீரருக்கான வாய்ப்பு இவருக்கு கிடைப்பது கடினமே!

- Advertisement -

அக்சர் படேல்

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் காயமடைந்து ரவீந்திர ஜடேஜா வெளியேறி இருந்ததால் இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்ற அக்சர் படேல் இடமிருந்து குறிப்பிடும்படியான சிறப்பான ஆட்டங்கள் வரவில்லை. சாஹல், குல்தீப், ரவி பிஷ்னோய் ஆகியோர் ஸ்பின்னர்களாக இடம்பெறவே அதிக வாய்ப்புண்டு. ஸ்பின் ஆல்ரவுண்டர் என்று பார்த்தால் ரவீந்திர ஜடேஜாவிற்குத்தான் முதலிடம். எனவே டி20 உலகக்கோப்பை அணியில் இவருக்கான இடம் என்பது கடினமே!

உம்ரான் மாலிக்

தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவின் அதிவேக பவுலர் உம்ரான் மாலிக்தான். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 16 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, தனது அதீத வேகத்தால் கவனம் ஈர்த்த இவர், இந்திய டி20 அணியில் இடம்பெற்றார். ஆனால் இவர் ஆட்டத்தின் மத்திம ஓவர்களில் வேகமாக வீசினாலும், ரன்கள் நிறைய கசியவிடுகிறார். தற்போது மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற இடத்திற்கு, ஹர்சல் படேல், ஆவேஷ்கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை எல்லாம் தாண்டி இவர் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது கொஞ்சம் கூடுதல் சிரமமே!

வெங்கடேஷ் ஐயர்

பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயத்தால் விளையாடாமல் இருந்த பொழுது, அவருக்கான மாற்றாய் வெங்கடேஷ் ஐயர் கொண்டு வரப்பட்டார். ஆனால் ஹர்திக் பாண்ட்யாவின் காயம் குணமானதோடு, அவரது ஆல்ரவுண்ட் செயல்பாடும் மிகச்சிறப்பாக இருக்கிறது. இதனால் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இவருக்கான இடம் என்பது சந்தேகம்தான்.

- Advertisement -

ஸ்ரேயாஷ் ஐயர்

தற்போது வரை மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியிலும் இவருக்கு இடம் தரப்படுவதோடு ஆடும் அணியிலும் இடம்பெறுகிறார். ஆனால் சூர்யகுமாரின் அதிரடி பேட்டிங் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடி பேட்டிங் திறமை, அடுத்தடுத்து வரும் டி20 தொடர்களில் இந்திய அணியில் இவரது இடத்தை கேள்வி குறியாக்கலாம். டி20 உலகக்கோப்பை இந்திய அணியிலும் இவர் இடம்பெறாமலும்போகலாம்!