ஐபிஎல் தொடரை கேப்டனாக ஆரம்பித்து அதற்கு பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்ட 5 வீரர்கள்

0
2159
Gautham Gambhir and David Warner

ஐபிஎல் தொடரில் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் வீரர் யார் என்று பார்த்தால் ஒரு அணியின் கேப்டன் தான். பல கோடி மக்கள் பார்க்கும் தொடரில் ஒரு சிறிய தவறான முடிவு எடுத்தால் கூட அது பல ரசிகர்களால் மோசமாக விமர்சிக்கப்படும். அதுமட்டுமில்லாது கேப்டனாக இருந்து கொண்டு ரன் எடுக்க தவறினால் வேறு யாரிடமாவது கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டியது தானே ஒரு விமர்சனமும் எழும். தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்துக் கொண்டே வந்தால் அணியால் வெற்றி பெற முடியாது. இப்படி ஒரு அணி தொடர்ந்து வெற்றி பெறாமலே இருந்தால் அணி நிர்வாகம் கேப்டனை மாற்றுவது குறித்து பரிசீலிக்க ஆரம்பிக்கும். அப்படி ஐபிஎல் தொடரை கேப்டனாக ஆரம்பித்து அதன் பிறகு அணியில் நீடிக்க முடியாமல் வெளியே அமர்ந்த ஐந்து முக்கிய வீரர்களை இங்கு பார்ப்போம்.

குமார் சங்ககாரா – 2013

இலங்கை அணியின் நட்சத்திர பேட்டிங் வீரர் குமார் சங்ககாரா. இவரது பேட்டிங் திறமையால் இலங்கை அணி பல முக்கிய போட்டிகளில் வென்று உள்ளது. இலங்கை அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் இவர்தான். இப்பேர்பட்ட வீரர் 2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக அந்த தொடரை ஆரம்பித்தார். ஆனால் 9 ஆட்டங்களில் 120 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சக வீரர் கேமரன் ஒயிட்டிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

- Advertisement -

டேனியல் வெட்டோரி – 2012

அந்த அணியின் சூழல் ஜாம்பவான் டேனியல் வெட்டோரி 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை பெங்களூரு அணியின் கேப்டனாக ஆரம்பித்தார். விக்கெட் எடுக்க தவறினால் அந்த ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டார். வெட்டோரிக்கு பதிலாக அணியில் முரளிதரன் சேர்க்கப்பட்டார்.

ரிக்கி பாண்டிங் – 2013

கிரிக்கெட் உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் 2013ஆம் ஆண்டு மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் சேர்க்க முடியாத காரணத்தினால் அதே தொடரில் அவருக்கு பதிலாக கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டார். மும்பை அணி அந்த தொடரில் கோப்பை வென்றது.

கௌதம் காம்பீர் – 2018

இரண்டு முறை ஐபிஎல் தொடரை வென்ற கேப்டன் கவுதம் காம்பீர் தனது கடைசி ஐபிஎல் தொடரை டெல்லி அணிக்காக விளையாடினார். அந்த தொடரை கேப்டனாக ஆரம்பித்த அவர் போதுமான ரன்கள் சேர்க்க முடியாத காரணத்தினால் கேப்டன் பொறுப்பை ஷ்ரேயாசிடம் கொடுத்து விட்டு வெளியில் அமர்ந்து கொண்டார்.

- Advertisement -

டேவிட் வார்னர் – 2021

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தொடங்கினார் டேவிட் வார்னர். ஆனால் அவரால் இன்றைய தொடர்களைப் போல சிறப்பான பங்களிப்பை வழங்க முடியாத காரணத்தினால் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இதற்கு பதில் கேப்டன் ஆனார். ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதியில் வீரராக இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும் இவரால் அதிலும் சரியாக விளையாட முடியாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.