கிரிக்கெட்

தகுதி இருந்தும் உலகக்கோப்பை டி20 அணியில் இடம் கிடைக்காமல் போன 5 வீரர்கள்!

- Advertisement -

3. இஷான் கிஷன்

இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம் பெற்று அறிமுக போட்டியில் அரைசதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் இசான் கிசன். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய இவர், இந்திய அணியின் துவக்க வீரராக சில போட்டிகளில் களமிறங்கினார். அவ்வப்போது சோதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் வெளியில் அமர்த்தப்பட்டார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலும் கடைசியாக விளையாடினார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இம்முறை இவர் நீக்கப்பட்டிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரராகவும் இவர் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடியவர் 418 ரன்கள் அடித்திருந்தார். துவக்க வீரர் மற்றும் கீப்பர் என்கிற வகையில் இவர் கவனிக்கப்பட்டு வந்தார். ஆனால் கேஎல் ராகுல் இந்திய அணிக்குள் வந்துவிட்டதால் இவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

Page: 1 2 3 4 5

Published by

Recent Posts