நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு வலியுறுத்தி பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்பாதி ராயுடு பேசும்போது “நான் நினைக்கிறேன், இது கண்டிஷன்களைப் பொறுத்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து இதுபோன்ற பிட்ச்களை வழங்கினால், அவர்கள் இதே அட்டாக் உடன் தொடர்ந்து விளையாடலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் எவராவது சற்று சோர்வாகத் தெரிந்தால், முகமது சிராஜை உள்ளே கொண்டு வந்து அவர்களின் வொர்க்லோட்டை மேனேஜ் செய்யலாம்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, நீங்கள் எதையும் மாற்ற விரும்ப மாட்டீர்கள். ஆனால் நான் நிச்சயமாக குல்தீப்பை பிளேயிங் லெவனில் கொண்டு வர முயற்சிப்பேன், ஏனெனில் அவர் சிறிது காலமாக பெஞ்சில் அமர்ந்திருக்கிறார், மேலும் இது அவருக்கோ அல்லது இந்திய அணிக்கும் நல்லதல்ல. எனவே அவரை டெஸ்ட் செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” என்று கூறி இருக்கிறார்.