இந்திய கிரிக்கெட்

விராட் கோலி அந்த இடத்துக்கு வந்தா.. பவுலர்களை காப்பாற்றவே முடியாது.. பசங்க பாத்து கத்துக்கோங்க – ரவி சாஸ்திரி பாராட்டு

​நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி அடித்த அதிரடி ஆட்டம் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

​இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் கடினமான ஆடுகளத்தில் விராட் கோலி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதை ரவி சாஸ்திரி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

​இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்போது “இது போன்ற கண்டிஷன்களில் அடிக்கப்படும் எழுபது ரன்கள் என்பது ஒரு சதத்திற்கு சமமானதாகும். அவர் இன்னிங்ஸ் முழுவதும் ஒருபோதும் அவசரப்பட்டு முன்னோக்கிச் செல்லவில்லை. அவர் இதுபோன்று ஃபோர்த் கியாரில் விளையாடும்போது பந்துவீச்சாளர்களைக் காப்பாற்ற யாருமே முடியாது. டிரஸ்ஸிங் ரூமில் உள்ள இளம் வீரர்கள் அவரைப் பார்த்து, அவர் 75 ரன்களில் அவுட் ஆனதற்கு எப்படி கோபப்படுகிறார் என்பதை கவனிக்கும் போது, அவர்கள் இன்னும் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வார்கள்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய அவர் “அவர் மறுமுனையில் இருக்கும் சுப்மன் கில் மீது இருந்த பிரஷரை முழுமையாகக் குறைத்தார். அவர் மிக விரைவாக ரன்களை ஓடி எடுத்து ஸ்கோரை உயர்த்துவதால் பந்துவீச்சாளர்கள் மீது எப்போதும் அழுத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. நான் அவரை இத்தனை ஆண்டுகளாகப் பார்த்திருக்கிறேன், ஆனால் இதற்கு மேல் அவரே சிறந்த முறையில் பேட்டிங் செய்திருப்பாரா என்று என்னால் சொல்ல முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by

Recent Posts