தகுதி இருந்தும் உலகக்கோப்பை டி20 அணியில் இடம் கிடைக்காமல் போன 5 வீரர்கள்!

0
233

முழு தகுதி இருந்தும் டி20 உலககோப்பை அணியில் இடம் கொடுக்கப்படாமல் ஏமாற்றமடைந்த ஐந்து வீரர்களின் பட்டியல் இங்கு காண்போம்.

2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 13ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கிட்டத்தட்ட இரண்டு வார காலத்துக்கு முன்பு அறிவித்துவிட்டன. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி இந்திய தேர்வுகுழு, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி உலக கோப்பையில் பங்கேற்கும் அணியை தேர்வு செய்தது.

- Advertisement -

15 பேர் கொண்ட இந்த அணியில் பெரும்பாலும் எதிர்பார்த்த வீரர்கள் இடம்பெற்று இருந்தாலும் ல், எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அந்த வரிசையில் சஞ்சு சாம்சன் குல்தீப் யாதவ் போன்றோரும் இருக்கின்றனர். தகுதி இருந்தும் டி20 உலக கோப்பை தொடருக்கு செல்லும் இந்திய அணியில் இடம் கொடுக்கப்படாமல் ஏமாற்றம் அடைந்த ஐந்து வீரர்களின் பட்டியலை காண்போம்.

1. சஞ்சு சாம்சன்

- Advertisement -

இதுவரை 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். கீப்பிங்கில் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும் மிடில் ஆர்டரில் அவரது பேட்டிங் போதிய அளவிற்கு இல்லை. இந்திய அணியில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்ததால், அவருக்கு டி20 அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. மேலும் ரிஷப் பண்ட் சமீப காலமாக நன்றாக செயல்படவில்லை என்றாலும் ஆஸ்திரேலிய மண்ணில் அவர் நன்றாக விளையாடியுள்ளார். அந்த நம்பிக்கை மற்றும் அதிரடியான ஆட்டக்காரர்களில் ஒருவராகவும் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கீழ் வரிசையில் தினேஷ் கார்த்திக் பெரிய நம்பிக்கையை கொடுத்து வருகிறார். ஆகையால் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் கீப்பிங்கில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -
1
2
3
4
5