சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை ரன் அவுட் ஆகியுள்ள 5 வீரர்கள்

0
210
Ricky Ponting and Rahul Dravid run out

ஒரு கிரிக்கெட் வீரர் பல விதமாக ஆட்டமிழக்கலாம். அவை அனைத்திலும் மிகவும் மோசமான ஒன்று ரன் அவுட் தான். நிதானமாகவும் கவனமாகவும் ரன்கள் சேர்த்துக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென ரன் அவுட் மூலம் பெவிலியன் திரும்புவது கொடுமை. மேலும், இந்த முறையில் அவுட் ஆகும் போது இந்த விக்கெட் பந்து வீச்சாளர் கணக்கில் சேராது.

பேட்டிங் செய்யும் இரு வீரர்களிடமும் நல்ல புரிதல் இருப்பது அவசியம். அப்படி இல்லையேல் தேவையில்லாத ரன் அவுட் நிகழ நேரிடும். பல முறை வீரர்கள் இந்தக் காரணத்தினால் ஆட்டமிழந்துள்ளனர். அதே சமயம் துடிப்பான ஃபீல்டிங் மூலம் ரன் அவுட் செய்த ஃபீல்டர்களுக்கும் பாராட்டுகள் வழங்க வேண்டும். ரன் அவுட்டைத் தடுக்க சிறந்த புரிதலோடு வேகமாக ஓடினாள் ஓட வேண்டும். விராட் கோலியும் தோனியும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை ரன் அவுட் ஆன 5 வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

இன்சமாம் உல் ஹக்

ஐந்தாவது இடத்தில் இருப்பவர் இன்சமாம் உல் ஹக். இவரை இந்தப் பட்டியலில் பார்ப்பது ஆச்சர்யம் இல்லை. ஆனால் 5வது இடத்தில் இருப்பது தான் வியக்கூடிய விஷயம். விக்கெட்டுகளுக்கு இடையே இவர் மிகவும் மெதுவாக ஒடுவார். மொத்தம் 46 முறை ரன் அவுட் ஆகியுள்ளார்.

ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மாபெரும் அங்கமான ரிக்கி பாண்டிங் எண்ணெற்ற சாதனைகள் படைத்தது பல கோப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் இவரின் பெயர் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது நீண்ட கிரிக்கெட் கேரியர் தான். தன் நாட்டிற்காக 560 போட்டிகளில் ஆடிய ரிக்கி பாண்டிங் 47 முறை ரன் அவுட் மூலம் விக்கெட்டை இழந்துள்ளார்.

மர்வான் அட்டப்பட்டு

முன்னாள் இலங்கை கேப்டன் மர்வான் அட்டப்பட்டு ஓடுவதில் அவ்வளவு மோசம் இல்லை. துவக்க ஆட்டக்காரராக சனத் ஜெயசூரியாவுடன் இணைந்து இலங்கை அணிக்காக முக்கிய ரன்களை சேர்த்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் மிக திறமையான மற்றும் முக்கியமான ஓர் வீரர். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 48 முறை ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியுள்ளார்.

- Advertisement -

மஹேலா ஜெயவர்த்தனே

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்த்தனே. மர்வான் அட்டப்பட்டுவைப் போல இவரும் இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இவரும் விக்கெட்டுகளுக்கு இடையே நன்றாக ஒடும் ஓர் வீரர் தான். பெரும்பாலும் மற்றொரு வீரரால் தான் இவர் ரன் அவுட் ஆகியுள்ளார். ஜெயவர்த்தனே 51 முறை ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்துள்ளார்.

ராகுல் டிராவிட்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை ரன் அவுட் ஆகிய வீரர்கள் பட்டியலில் முதலில் இருப்பது ராகுல் டிராவிட். மிகவும் ஆச்சரியமாக உள்ளது அல்லவா ? டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் விக்கெட்டை எடுப்பது சாமான்யமான காரியம் அல்ல. அதனால் அதிக முறை இவர் ஒருநாள் போட்டிகளில் தான் ரன் அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். மொத்தம் 53 முறை ரன் அவுட் ஆகியுள்ளார் நம் நடப்பு இந்திய அணி பயிற்சியாளர்.