சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றிய ஐந்து நட்சத்திர பந்துவீச்சாளர்கள்

0
237
Ankit Rajpoot and Ben Laughlin

ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் இருக்கும். 12 வருடங்களில் அந்த அணி 11 வருடம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த 11 வருடங்களில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல் நான்கு முறை சாம்பியன் பட்டத்தையும், ஐந்து முறை ரன்னர் அப் பட்டத்தையும் வென்றுள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையில் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், பல்வேறு நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடி இருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல்வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று விளையாடி இருக்கின்றனர். பலர் பங்கேற்று விளையாடி இருந்தாலும் அதில் பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் அதிக முறை சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடியது கிடையாது. அப்படி சென்னை அணிக்காக இதுவரை விளையாடி ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றிய பந்துவீச்சாளர்களை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

அங்கித் ராஜ்பூட்

2013ஆம் ஆண்டு இவர் சென்னை அணிக்காக விளையாடி இருக்கிறார். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் சென்னை அணியில் விளையாடியவர் என்று பலருக்கு தெரியாது. தற்போது டெல்லி அணிக்காக மிக அற்புதமாக விளையாடி வரும் அவர் 2013ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அந்த ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அந்த ஒரு விக்கெட் மும்பை அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய லெஜன்ட் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

பென் லாஃப்லின்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான இவர் ராஜ்புட்டை போலவே 2013ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடி ஒரே ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இவரும் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அந்த ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இவர் கைப்பற்றிய விக்கெட் முன்னாள் மும்பை அணி வீரரும் தற்போதைய சென்னை அணி வீரருமான அம்பத்தி ராயுடு விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது

ரோனிட் மோர்

2015ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் சென்னை அணிக்காக விளையாடி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் சென்னை அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும் ஹைதராபாத் அணிக்கான ஒரு போட்டியிலும் இவர் சென்னை அணியில் விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த போட்டியில் இவர் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை கைப்பற்றினார். சூரியகுமாரின் விக்கெட் இவர் சென்னை அணிக்காக கைப்பற்றிய ஒரே ஒரு விக்கெட் ஆகும்.

ஜான் ஹாஸ்டிங்ஸ்

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த இவர் 2014ம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். 90 ரன்கள் குவித்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வார்னரின் விக்கெட்டை இவர் அந்த போட்டியில் கைப்பற்றினார். இதன் மூலமாக சென்னை அணிக்காக ஒரே ஒரு விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இவரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

11எஸ் வித்யுத்

தமிழ்நாட்டைச் சேர்ந்த சீரான சிவராமகிருஷ்ணன் வித்யுத் சென்னை அணிக்காக மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் அடிப்படையில் நல்ல பேட்டிங் விளையாடக்கூடிய வீரர் ஆவார். 2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக எதிராக நடைபெற்ற போட்டியில், ஸ்வப்னில் அஸ்நோட்கரின் விக்கெட்டை இவர் கைப்பற்றினார்.

இந்த ஒரு விக்கெட் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பந்து வீச்சாளர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் இவரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.