குறைந்த நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கும் 5 பந்து வீச்சாளர்கள்

0
3480
Ravindra Jadeja and Mitcell Santner

ஓவர் ரேட் என்பது கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் ஒன்று. பந்துவீசும் அணி, தங்களுக்கு அளித்த நேரத்திற்குள் அனைத்து ஓவர்களையும் வீசி முடிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அவ்வணியின் கேப்டனுக்கு போட்டியின் ஊதியத்தில் அபராதம் விதிக்கப்படும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இது போன்ற ஓவர் ரேட்டுகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படுகிறது. அதனால் கேப்டன்கள் இவ்விசியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர், நீண்ட தூரம் ஓடி வந்து பந்துவீசுவார். ஆகையால் அவர்கள் ஓவரை முடிப்பதற்கு நேரம் எடுக்கும். அவர்கள் எடுத்துக்கொண்ட கூடுதல் நேரத்தை, ஸ்பின்னர்கள் வைத்து சமன் செய்து கொள்வது கேப்டன்களின் வழக்கம். ஆனால் அனைத்து ஸ்பின்னர்களும் வேகமாக ஓவர்களை முடிப்பதில்லை. இந்தக் கட்டுரையில், குறைந்த நேரத்தில் ஓவர்களை முடிக்கும் 5 வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

1.ரவீந்திர ஜடேஜா

இப்பட்டியலில் முதலில் இருக்கும் ஸ்பின்னர், ரவீந்திர ஜடேஜா. சென்னை சூப்பர் கிங்ஸோ இந்தியாவோ, இரண்டிற்கும் ஓவர் ரேட் பிரச்சினை ஏற்ப்பட்டால், அதை சரி செய் அங்கே ஜடேஜா நிச்சயமாக வருவார். ஆகஸ்ட் மாதம் நடந்த இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில், ஜடேஜாவை வைத்து தான் ஓவர் ரேட்டை கட்டுக்குள் கொண்டுவந்தார் கேப்டன் கோஹ்லி. ஜடேஜாவின் குறைந்த ரன் – அப் மற்றும் வேகமான ஆக்சன் தான் அவருடைய பிளஸ் பாயின்ட்.

- Advertisement -

2.இஷ் சோதி

பொதுவாக, லெக் ஸ்பின்னர்களின் ரன் – அப் பெரிதாக இருக்கும். ஆனால் நியூசிலாந்து வீரர், இஷ் சோதி வேறு ரகத்தை சேர்ந்தவர். மற்ற ஸ்பின்னர்களை காட்டிலும் இவரது ஆக்சன், எளிமையாக இருக்கும். அது அவரது ஓவர் ரேட்டை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும், சர்வதேச டி20களில் இவர் மிகவும் வெற்றிகரமான ஒரு ஸ்பின்னராகவே திகழ்கிறார். இஷ் சோதியின் எகனோமியும் குறைவு தான்.

3.முஜீப் உர் ரஹ்மான்

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இந்த நட்சத்திர ஸ்பின்னர், உலக டி20 பவுலர்கள் வரிசையில் 5வது இடத்தில் உள்ளார். இவருடைய பவுலிங் ஆக்சன் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சிறிது நேரம் கூட வீணாக்காமல், வேகமாக ஓவரை முடிக்கும் நோக்கத்தில் பந்து வீசுவார். அதை சமாளிக்க பேட்ஸ்மேனுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும். முஜீப், ஐ.பி.எலில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். மேலும், அவர் உலகில் நடக்கும் பல லீக்கில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

4.குருனால் பாண்டியா

ரவீந்திர ஜடேஜாவைப் போல குருனால் பாண்டியாவும் சிறிய ரன் – அப்பைக் கொண்டவர். ஐ.பி.எலில் 8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டாட். கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அவரை தேவையான நேரங்களில் சிறப்பாக பயன்படுத்தினார். சமீபத்தில் இந்திய அணிக்காக தொடர்ந்து ஆடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் அரை சதம் விளாசிய அற்புதம் செய்தார். அடுத்து நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இவரது பங்களிப்பு நிச்சயம் இந்திய அணிக்கு உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

5.மிட்செல் சான்ட்னர்

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர், மிட்செல் சான்ட்னர். இவரும் சிறிய ரன் – அப்பைக் கொண்டவரே. இவரது ஆக்சனும் சாதாரணமாகவே இருக்கும். இடது கை ஸ்பின்னரான சான்ட்னர், மிகவும் எகனாமிக்கலாக பந்துவீசக் கூடிய வீரர். இவர் வீசும் ஒவ்வொரு பந்திலும் வேறுபாடு இருப்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அது அவரை சிறந்த ஸ்பின்னராக உயர்த்தி உள்ளது. நியூசிலாந்து அணியின் முக்கிய அங்கமாக இவர் கருதப்படுகிறார். ஐ.பி.எலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.