492 ரன்… இரண்டு சதங்கள்… இலங்கையை அதன் சொந்த மண்ணில் அலறவிட்ட அயர்லாந்து!

0
9953
SlvsIre

அயர்லாந்து கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு தற்பொழுது சுற்றுப்பயணம் செய்து இருக்கிறது!

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி இந்த மாதம் ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது!

- Advertisement -

இந்த நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. டாசில் வென்ற அயர்லாந்து முதலில் தைரியமாக பேட்டிங் செய்வது என தீர்மானித்தது.

துவக்க வீரர்களாக வந்த மெக்கலம் மற்றும் டாம் மூர் இருவரும் சொற்பரன்களில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த கேப்டன் ஆன்டி பால்பேரின் மிகச் சிறப்பாக விளையாடி 95 ரன்கள் எடுத்தார். இவருடன் சேர்ந்து விளையாடிய இன்னொரு அனுபவ வீரர் பால் ஸ்டெர்லிங் அபாரமாக விளையாடி சதம் அடித்து 103 ரண்களில் ஆட்டம் இழந்தார். நேற்றைய முதல் நாள் முடிவின்போது 319 ரன்களுக்கு அயர்லாந்து அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து இருந்தது.

இன்று தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணிக்கு கர்ட்டீஸ் கேம்பர் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 111 ரன்கள் குவித்தார். இவருடன் பக்கபலமாக இணைந்து விளையாடிய லார்கன் டக்கர் அதிரடியாக 106 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அயர்லாந்து அணி இரண்டாவது நாளில் 490 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி விக்கெட் இழப்பில்லாமல் 81 ரன்கள் தற்பொழுது எடுத்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய அயர்லாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டு வந்து இருப்பது மிகச் சிறப்பானது.

முதலில் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடராக நடக்க இருந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டியாக மாற்றப்பட்டு நடைபெறுகிறது. ஒருவேளை ஒரே டெஸ்ட் ஆக இருந்திருந்தால் அயர்லாந்து அணியின் இந்த எழுச்சியை பார்த்திருக்க முடியாது. ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற மற்ற சிறிய அணிகளுக்கு சரியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அயர்லாந்தின் இந்த ஆட்டத்தின் மூலம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்!