404 ரன்.. தன் 24 வருட சாதனையை உடைத்த இளைஞருக்கு யுவராஜ் சிங் நெகிழ்ச்சியான பாராட்டு

0
145
Yuvraj

இந்தியாவின் உள்நாட்டு 19 வயது உட்பட்டவர்களுக்கு நடைபெறும் டெஸ்ட் தொடரான கூச் பெஹார் டிராபி தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் மும்பை மற்றும் கர்நாடக அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று மோதிக்கொள்கின்றன. டாஸ் வென்று மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

- Advertisement -

இதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 380 ரன்கள் சேர்த்தது. இந்த கர்நாடக அணியில் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதற்கடுத்து விளையாடிய கர்நாடக அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த 18 வயதான பிரகார் சதுர்வேதி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

24 வருடங்களுக்கு முன்பாக கூச் பெஹார் டிராபியில் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் வீரர் யுவராஜ் சிங் அசாம் மணிக்கு எதிராக 358 ரன்கள் குவித்து இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கர்நாடக அணியின் பிரகார் சதுர்வேதி 638 பந்துகளை சந்தித்து 46 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 44 ரன்கள் குவித்து யுவராஜ் சிங்கின் தனித்துவமான சாதனையை முறியடித்தார்.

மேலும் கர்நாடக அணி எட்டு விக்கெட் இழப்புக்கு நேற்று 890 ரன்கள் சேர்த்து இருந்தது. முதல் இன்னிங்ஸில் மும்பையை விட 510 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கின்ற காரணத்தினால், இந்தத் தொடரை கர்நாடக அணியே கைப்பற்றுகிறது.

இந்த நிலையில் தன்னுடைய சாதனையை முறியடித்த இளம் வீரருக்கு யுவராஜ் சிங் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பிரகாஷ் சதுர்வேதிக்கான வாழ்த்தில் யுவராஜ் சிங் கூறும் பொழுது “இதைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. சாதனைகள் என்பதே உடைக்கப்படுவதற்காகத்தான். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.