8 ரன்களுக்கு 4 விக்கெட்.. நைட் ரைடர்ஸ் அணியை சிதறவிட்ட சிஎஸ்கே வின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வீரர்.. யார் இவர் ?

0
784

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் இன்று துவங்கியது . இதன் முதல் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின .

இந்தப் போட்டியில் டிஎஸ்கே அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் மேஜர் டி20 லைவ் கிரிக்கெட் போட்டிகளில் வாங்கி இருக்கும் அணிதான் டெக்சா சூப்பர் கிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியின் கேப்டன் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பாப் டுப்லசிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய டி எஸ் கே அணி டேவன் கான்வே மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி 112 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் சுனர்பூந்துவீச்சாளர் முகமது மோசின் சிறப்பாக பந்துவீசி எட்டு ரங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

பாகிஸ்தான் நாட்டில் பிறந்தவரான முஹம்மது மோசின் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் பிறந்தவரான இவர் 2015 ஆம் ஆண்டின் காயத் இ அசாம் கிரிக்கெட் தொடரில் தனது முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். லெக் ஸ்பின் பௌலரான இவர் பவுலிங் ஆல் ரவுண்டர்.

பாகிஸ்தான் நாட்டில் ஏழு முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் . இவரது பந்து வீச்சு சராசரி 25.67. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளிலும் 2020 ஆம் ஆண்டு பெஷாவர் ஸல்மி அணிக்காக விளையாடி இருக்கிறார். பி எஸ் எல் தொடர்களில் ஒரு போட்டியில் மட்டும் ஆடி இருக்கும் இவர் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

சுழற் பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டராகவும் விளங்கும் முகமது மோசின் பாகிஸ்தான் நாட்டின் முதல் தரப் போட்டிகளில் ஒரு அரை சதம் எடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்கு குடியேறி முதல் தர கிரிக்கெட் விளையாடிய போது தலாஸ் பிரீமியர் லீக் போட்டிகளிலும் அரை சதம் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

அந்தப் போட்டிகளில் இவரது ஆட்டமே டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு இவர் தேர்வு ஆவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் அந்த அணியின் கேப்டன் சுனில் நரேன்,கார்ன் ட்ரை, ஆடம் ஜம்பா மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார் . நாலு ஓவர்கள் வீசி இருக்கும் இவர் வெறும் எட்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருக்கிறார் . அதிலும் ஆறு இடங்கள் இவரது முதல் ஓவரில் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .