ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணிக்காக 4 வீரர்கள் அறிமுகம்.. ஆர்சிபி ஆச்சரியப்படுத்தும் முடிவு

0
231
Dhoni

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இன்று கலை நிகழ்ச்சிகளுடன் மிகக் கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இன்றைய முதல் போட்டியில் கடந்த வருட சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்கின்றன.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆச்சரியப்படுத்தும் விதமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் குறித்த அறிக்கையில் இன்று முதலில் பந்து வீசுவது நன்றாக இருக்கும், இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஆர்சிபி அணியில் ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரண் சர்மா, அல்சாரி ஜோசப், மயங்க் தாகர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரன், அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணியில் நான்கு வீரர்கள் அறிமுகம்

சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் இம்பேக்ட் பிளேயர்களாக சிவம் துபே, சர்துல் தாக்கூர் ஆகியோர் இருக்கிறார்கள். இதிலிருந்து யாரை கொண்டு வருவார்கள் என்பது தற்போது வரை குழப்பமாக இருக்கிறது.மேலும் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்காக ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்சல், சமீர் ரிஸ்வி மற்றும் முஸ்தஃபீஸூர் ரஹ்மான் என முதன் முதலில் நான்கு வீரர்கள் அறிமுகமாகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் நிகழ்வுக்கு பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் “இந்த வாய்ப்பை ஒரு பாக்கியமாக உணர்கிறேன். நான் யாருடைய இடத்தையும், நிரப்பாமல் என்னுடைய வழியில் செல்ல விரும்புகிறேன். கேப்டன் பதவி கொடுக்கப்படுவது எனக்கு கடந்த வாரத்தில் தெரியும். ஆனால் கடந்த ஆண்டு எனக்கு தோனி பாய் இது குறித்து கூறியிருந்தார். துரதிஷ்டவசமாக காணவே மற்றும் பதிரனா இருவரும் கிடைக்கவில்லை. சமீர் ரிஸ்வி அறிமுகமாகிறார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : BANvsSL.. 57-5 to 259-5.. இலங்கை அணியை காப்பாற்றிய ஜோடி.. பங்களாதேஷ் முதல் டெஸ்டில் திணறல்

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளிசிஸ் பேசும்பொழுது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இது ஒரு நல்ல விக்கெட்டாக தெரிகிறது. சென்னைக்கு திரும்ப வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு சென்னை அணியை வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய அணி தயாரிப்பு நன்றாக இருக்கிறது. எங்களிடம் சில நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.