வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை.. பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்திய ஏ அணியில் உள்ள 4 நட்சத்திரம்.. எந்த சேனலில் பார்ப்பது?

0
501

வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது முக்கிய கட்டத்தை விட்டு இருக்கிறது. இந்தியா  விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தற்போது தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில்  பாகிஸ்தானை இன்று கொழும்பு நகரில் எதிர்கொள்கிறது.

இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்திய ஏ அணியின் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய நான்கு வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். அண்டர் 19 கேப்டன் ஆக இருந்த யாஷ் தூல், இந்திய ஏ அணி கேப்டன் ஆகவும் விளங்குகிறார். இந்தத் தொடரில் யாஷ் தூல் ஏற்கனவே சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக யாஷ் தூல் ஜொலிப்பார் என எதிர்பார்க்கலாம். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன். நேபாள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் அரைசதம் அடைத்திருக்கிறார்.

நடந்து முடிந்த டிஎன்பிஎல் தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் நான்கு அரை சதம் அடித்து அவரும் நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சாய் சுதர்சன் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கலாம். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அபிஷேக் ஷர்மா.

ஆல்ரவுண்டரான இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். இந்த தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கும் அபிஷேக் ஷர்மா,சுழற் பந்து வீச்சு சிறப்பாக போடக்கூடியவர்.இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் சிஎஸ்கே வீரர் நிஷாந்த் சிந்து.

- Advertisement -

நேபாள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி நிஷாந்த் சிந்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இந்திய ரசிகர்களின் கவனத்தை நிச்சயம் இவர் ஈர்ப்பார் என நம்பலாம். இந்த போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது. Fancode ஆப்பிள் நேரலையில் பார்க்கலாம்.